லிட்டில் இந்தியாவில் புதுவித ரங்கோலி அனுபவம்

கலை சார்ந்த புதிய திட்­டம் ஒன்று, 5,000 ஆண்டு பழமை வாய்ந்த ரங்­கோலியை மக்­க­ளுக்­குக் கொண்­டு­வரு­கிறது. இந்­திய கலை­க­ளைப் பற்­றி­யும் கலா­சா­ரத்­தைப் பற்­றி­யும் இளம் தலை­மு­றை­யி­னர் ஆழ­மாக அறிந்­திட இது ஒரு வாய்ப்­பாக அமை­யும்.

இந்­தப் புதிய இயக்­கத்­தின் பெயர் 'த ரங்­கோலி மூவ்­மண்ட்'. முதன்­மு­த­லாக சிங்­கப்­பூ­ரில் ஒரு பாரம்­ப­ரிய கலை வடி­வம், பிரம்­மாண்­ட­மாக கண்­கவர், மின்­னி­லக்­கக் கண்­காட்­சி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. இம்­மா­தம் 28ஆம் தேதி­யன்று தொடங்­கும் கண்­காட்சி, அடுத்த மாதம் 20ஆம் தேதி­யன்று முடி­வு­றும்.

லிட்­டில் இந்­தி­யா­வின் கிளைவ் ஸ்தி­ரீட்­டில் கண்­காட்­சி­யைக் கண்டு ரசிக்­க­லாம். இயக்­கத்­தின் கருத்­து­ரு­வாக்­கத்தை 'டெக்ஸ்­சர் மீடியா' நிறு­வனம் திட்­ட­மிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. சில்­லறை வர்த்­தக மற்­றும் வர்த்­தக இடங்­களில் இரு­வ­ழித்­தொ­டர்­பு­டைய மின்­னி­லக்க ஊடக அம்­சங்­க­ளைப் பொருத்­து­வ­தில் இந்­நி­று­வ­னம் பெயர் போனது. 'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் மற்­றும் சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழ­கம் இத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

பாரம்­ப­ரிய நாட்­டுப்­புற கலை வடி­வ­மான ரங்­கோ­லிக்­கும் 'சிங்­க­ரங்­கோலி' கொள்­கை­க­ளுக்­கும் இடை­யி­லான தொடர்பை உணர்த்­து­வதே இந்­தத் திட்­டத்­தின் நோக்­கம்.

பல ஆண்­டு­க­ளாக ரங்­கோலி போடும் கலை­யைப் பயின்று வந்­த­வர் விஜயா மோகன், 63. இவர் பாரம்­ப­ரிய ரங்­கோலி வடி­வத்தை மெரு­கேற்­றி­ய­தில் உரு­வா­னதே 'சிங்­க­ரங்­கோலி'.

புதுமை, நவீ­னம், சமூ­கத்­தைப் பிணைக்­கும் தன்மை ஆகி­ய­வற்றை இக்­கு­றிப்­பிட்ட 'சிங்­க­ரங்­கோலி'யில் காண முடி­யும் என்­கி­றார் அவர்.

இசை, நட­னம், மின்­னி­லக்க ஓவி­யம் ஆகி­ய­வற்றை மகிழ்ச்சி தரும் இரு­வ­ழித்­தொ­டர்­பு­டைய காட்­சி­யாக வழங்­கும் இந்த ரங்­கோலி இயக்­கம், நான்கு மாதச் சமூ­கத் திட்­டம் ஒன்­றின் அங்­க­மா­கும்.

தேசிய கலை­கள் மன்­ற­மும் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­க­மும் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் துவங்­கி­வைத்த இத்­திட்­டத்­தின் பெயர் 'ஆர்ட் அர­வுண்ட் த சிட்டி'.

இத்­திட்­டத்­தின்­படி கில்­மன் பேரக்ஸ், டிசைன் ஆர்ச்­சர்ட், லிட்­டில் இந்­தியா, சைனா­ட­வுன் ஆகிய இடங்­களில் கலை சார்ந்த அனு­ப­வங்­களை மக்­கள் பெற­லாம்.

ரங்­கோலி கண்­காட்­சி­யைக் காண விரும்­பு­வோர் கிளைவ் ஸ்தி­ரீட்­டில் பயன்­ப­டுத்­தப்­ப­டாத இரு வெற்­றுத் தளங்­களை அணு­க­லாம். மொத்­தம் மூன்று கூடா­ரங்­கள் அமைக்­கப்­பட்டுள்ள நிலை­யில், ஒவ்­வொரு கூடா­ர­மும் வெவ்­வேறு அனு­ப­வத்­தைப் பார்ப்­ப­வ­ருக்கு வழங்­கும்.

கண்­காட்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!