முதியோர் நலன் பேணி பிணைப்பை வளர்க்கும் இளையர்

முதி­யோ­ருக்கு உத­வும் அதே­நே­ரத்­தில், முதி­யோ­ருக்­கும் இளை­யர்­களுக்­கு­மி­டையே இருக்­கும் தலை­முறை இடை­வெ­ளி­யைக் கடக்­கும் பால­மா­கச் செயல்­ப­டு­கிறது இளை­யர்­க­ளால் செயல்­ப­டுத்­தப்­படும் ‘ஜென்­லாப் கலெக்ட்­டிவ்’ அமைப்பு.

ஞாப­க­ம­றதி நோயால் அவ­தி­யுற்ற தனது பாட்டி அனு­ப­வித்த சிர­மங்­களை பார்த்த, 28 வயது கீர்த்­தனா பர­ம­சி­வத்­திற்கு முதி­யோரி­டையே ஏற்­படும் மன­நோய்­களைக் கண்­ட­றிந்து தீர்வு காணும் எண்­ணம் ஏற்­பட்­டது.

மேலும், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் அதி­க­மி­ருந்த கடந்த இரண்டு ஆண்­டு­களில் பல முதி­யோர்­ தங்கள் இல்­லங்­களில் தனி­மை­யில் அவ­தி­யுற்­ற­தால் அவர்­க­ளது மன­ந­லம் பாதிப்படைந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் விகி­தம் அதி­க­ரித்­ததை கீர்த்­தனா கண்­ட­றிந்­தார்.

முதி­யோ­ரின் மன­ந­ல­னைப் பேணும் நோக்­கு­டன் அவர்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும் வகை­யில் புது திறன்­க­ளைக் கற்­பிக்க எண்­ணி­னார். இதில் இளை­யர்­களை ஈடு­படுத்­தி­னால் இரு தலை­மு­றை­யி­ன­ரி­டையே உள்ள பிணைப்பு வலு­வடை­யும் என அவர் நம்­பி­னார்.

எண்­ணத்­தைச் செய­லாக்க, தேசிய சமூக சேவை மன்­றத்­தில் பணி­பு­ரி­யும் கீர்த்தனா, 2021ஆம் ஆண்டு ‘ஜென்­லாப் கலெக்ட்­டிவ்’ அமைப்­பைத் தொடங்­கி­னார்.

முதி­யோ­ருக்கு இன்­றைய மின்­னி­லக்­க­ம­ய­மான உல­கத்­தில் தேவை­யான திறன்­க­ளைக் கற்­றுத் தரு­வ­து­டன் இளை­யர்­க­ளுக்­குத் தேவை­யான வாழ்க்கை விழு­மி­யங்­க­ளை­யும் கற்­பிப்­பது இவ்­வ­மைப்­பின் நோக்­க­மா­கும்.

தற்­போது கீர்த்­த­னா­வு­டன் இவ்­வமைப்­பில் எட்டு தொண்­டூ­ழி­யர்­கள் இணைந்து பணி­பு­ரி­கின்­ற­னர். இவர்­கள் ஏறக்­கு­றைய 25 முதி­யோ­ருக்கு கணினி, கைப்­பேசி, மின்­னி­லக்க சாத­னங்­கள் போன்­ற­வற்­றைப் பற்றி கற்­பிக்­கின்­ற­னர். இதன் மூலம், முதி­யோர் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்­கா­மல், வேலை­க­ளுக்­குச் செல்­ல­லாம், வீட்­டி­லி­ருந்­த­ப­டியே வேலை பார்க்­க­லாம்.

இரு தலை­மு­றை­யி­ன­ரி­டையே உள்ள பந்­தத்தை மேலும் வலுப்­படுத்த ‘சாண்ட்­பாக்ஸ்’ என்ற திட்­டத்­தை­யும் கீர்த்­தனா அறி­மு­கப்­படுத்தி னார்.

இத்­திட்­டத்­தில் தற்­போது இரு இளை­யர்­களும் இரு முதி­யோ­ரும் இணைந்து பல கலந்­து­ற­வா­டல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இதன்­மூலம், அவர்­கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் பிணைப்­பு­டன் செயல்­பட்டு நல்­ல­தொரு உறவை அமைக்க முடி­கிறது என அவர் தெரி­வித்­தார். மேலும் பல இளை­யர்­க­ளை­யும் முதி­ய­வர்­க­ளை­யும் இணைக்­கும் முயற்சியில் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இவ்­வ­மைப்­பைத் தொடங்க தனக்கு தேசிய இளை­யர் மன்­றத்­தால் நடத்­தப்­பட்ட இளை­யர் செயல் சவா­லில் கிடைத்த அங்­கீ­கா­ரமே கீர்த்தனாவுக்கு முக்­கியப் பக்­க­ப­ல­மாக அமைந்­தது. தேசிய இளை­யர் மன்­றத்­தால்­அமைப்புக்­குத் தேவை­யான நிதி­உதவி வழங்­கப்பட்டது.

தேசிய தொண்­டூ­ழிய, மக்­கள் சேவை மையம் இட­வ­ச­தி­ அளித்ததுடன், அமைப்­பின் வளர்ச்­சிக்கு உத­வும் அறி­வு­ரை­கள் போன்­ற­வற்றை வழங்கி உத­வி­யது.

சிங்­கப்­பூர் கனி­வன்பு தினத்­தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டிருப்பதன் ­மூ­லம், பல முதி­யோ­ரும் இளை­ய­ரும் இவ்­வ­மைப்­பில் ஒன்­றிணை­யும் வாய்ப்பு அதி­க­ரிக்­கு­மென கீர்த்தனா நம்­பு­கி­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கால­த்­தில் அமைப்பைத் தொடங்­கியதால், ஆள் பற்­றாக்­குறை, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் இணை­யம் வழி செய்ய வேண்­டிய கட்­டா­யம் போன்ற பல சவால்­க­ளை கீர்த்தனா சந்­தித்­தார். எனினும், சிறந்த தொண்­டூ­ழி­யர் அணி­யைத் திரட்டி தற்­போது வெற்­றி­க­ர­மாக இவ்­வ­மைப்பை வழி­ந­டத்தி வரு­கிறார் கீர்த்­தனா.

எதிர்­கா­லத்­தில் மேலும் பல அமைப்­பு­களும் நிறு­வ­னங்­களும் ‘ஜென்­லாப் கலெக்ட்­டிவ்’ அமைப்­பு­டன் இணைந்து செயல்­பட்­டால் தனது இலக்கை வெற்­றி­க­ர­மாக அடை­ய­மு­டி­யும் என அவர் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

‘ஜென்­லாப் கலெக்ட்­டிவ்’ அமைப்­பு­டன் இணைந்து தொண்­டூ­ழி­யம் செய்ய விரும்­பு­வோர், அவர்­க­ளது இணை­யப்­பக்­கம் அல்­லது ஃபேஸ்­புக் பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!