புத்தாக்க வடிவில் பருவநிலைக் கண்காட்சி

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­திற்­குச் செல்­லும் பார்­வை­யா­ளர்­கள், ‘த கிளை­மேட் ஷோ’ எனும் 20 நிமி­டக் காணொ­ளி­யைக் காணும் வாய்ப்­பைப் பெறு­வ­தோடு ‘கில்ட் டிரிப்’ எனும் விளை­யாட்டு அங்­கத்­தில் பங்­கெ­டுக்­க­வும் இய­லும்.

எட்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மூன்­றா­வது முறையாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள ‘கிளை­மேட் சேஞ்ட்’ கண்­காட்சி இந்த வாய்ப்­பு­களை வழங்­கு­கிறது.

நீடித்த நிலைத்­தன்மை, பரு­வ­நிலை மாற்­றம் ஆகி­யவை பற்றி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது நோக்­கம்.

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­ய­மும், கனடா அறி­வி­யல் அரும்பொருளகமும் இணைந்து ‘த கிளை­மேட் ஷோ’ காணொ­ளி­யைத் தயா­ரித்­துள்­ளன. உள்­ளூர், வெளி­நாட்­டுப் பரு­வ­நிலை விஞ்­ஞா­னி­க­ளின் நீடித்த நிலைத்­தன்மை குறித்த ஆராய்ச்சி பற்றி எடுத்­து­ரைக்­கும் அந்­தக் காணொளி, பொது­மக்­கள் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் எவ்­வாறு ஈடு­ப­ட­லாம் என்­பதை வலி­யு­றுத்­து­கிறது.

கண்­காட்­சி­யின் விளை­யாட்டு அம்­ச­மான ‘கில்ட் டிரிப்’, பலகை விளை­யாட்டு வடி­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம், தண்­ணீர்ப் பயன்­பாடு, உணவு விர­யம், உணவு உற்­பத்தி, தொழில்­நுட்­பப் பயன்­பாடு, மின்­சாரப் பயன்­பாடு, மறு­சு­ழற்சி, நீடித்த நிலைத்­தன்மை போன்­றவை குறித்து பார்­வை­யா­ளர்­கள் தெரிந்துகொள்­ள­லாம்.

விளை­யாட்டு முடிந்தவுடன், பங்­கேற்­பா­ளர்­கள் அதில் பெற்ற மதிப்­பெண்­க­ளுக்­கேற்ப பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எவ்­வாறு பங்­காற்றி இருக்­கி­றார்­கள் என்­ப­தைக் குறிக்­கும் ‘கிளை­மேட் டிரை­வர்’ உரி­மத்­தைப் பெற­லாம். அதில் அவர்­க­ளின் அன்­றாட வாழ்­வில் நீடித்த நிலைத்­தன்­மையை இணைத்­துக்­கொள்­வ­தற்­கான குறிப்­பு­கள் இருக்­கும்.

நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­தில் நடை­பெற்ற கண்­காட்­சி­யின் தொடக்க விழா­விற்கு நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ சிறப்பு வருகை புரிந்­தி­ருந்­தார்.

சிங்­கப்­பூர் வரும் ஆண்­டு­களில் மேலும் வெப்­ப­மான, ஈரப்­ப­த­மிக்க பரு­வ­நி­லையை எதிர்­நோக்­கும் என்­ப­தை­யும் நூறாண்­டு­க­ளுக்கு முன் ஒப்­பி­டு­கை­யில், பரு­வ­நிலை மாற்­றம் விரை­வா­கி­யுள்­ளது என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர், இதற்கு அறி­வி­யல் சார்ந்த தீர்­வு­களும் மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் அவ­சி­யம் என்று கூறி­னார்.

இம்­மா­தம் 21ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலையத்துக்கான நுழை­வுச்­சீட்டு­களை வாங்கி, பார்­வை­யா­ளர்­கள் இந்­தக் கண்­காட்­சியை கண்டு ரசிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!