மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் கைது

கோலா­லம்­பூர்: கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த மலே­சி­யா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறிய 58 பேருக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் தற்­கா­லி­கச் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று தெரி­வித்­தார். நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­யவர்­க­ளுக்­காக 11 தற்­கா­லி­கச் சிறை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

சாலை­களில் போலி­சா­ரா­லும் ராணுவ அதி­கா­ரி­க­ளா­லும் அமைக்­கப்­பட்ட சோத­னைச்­சா­வ­டி­களில் பிடி­பட்­டோ­ருக்கு 1,000 ரிங்­கிட் வரை அப­ரா­த­மும் குறு­கிய கால சிறைத் தண்­டனையும் விதிக்­கப்­பட்­டுள்­ளன. கும்­பல்­க­ளா­கக் கூடி­ய­வர்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் பிடித்­த­னர். தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­களும் அடங்­கு­வர். மலே­சி­யா­வின் சிறைத் துறை­யின்­கீழ் பயிற்­சிக் கழ­கங்­க­ளாக இருந்த இடங்­கள் தற்­கா­லி­கச் சிறை­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யி­லி­ருந்து இவ்­வி­டங்­கள் தற்­கா­லி­கச் சிறை­க­ளாக இயங்கி வரு­கின்­றன.

ஏற்­கெ­னவே உள்ள சிறை­களில் இவர்­களை அடைத்­து­விட்­டால் சிறை­களில் கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் தற்­க­கா­லி­கச் சிறை­கள் அமைக்­கப்­பட்­ட­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஜோகூர் மாநி­லத்­தில் 3,000க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த மாதம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து ஜோகூர் மாநி­லம் முழு­வ­தும் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறிய 3,073 பேர் சிக்­கி­ய­தாக ஜோகூர் போலிஸ் ஆணை­யர் அயூப் கான் மைடின் பிச்சே தெரி­வித்­தார்.

இவர்­களில் 66 பேர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர் கூறி­னார். அர­சாங்க ஊழி­யர் கட­மை­யாற்ற இடை­யூறு விளை­வித்த குற்­றத்­தின்­கீழ் கைதா­ன­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­படும்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இரண்டு ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, 10,000 ரிங்­கிட் வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

அது­மட்­டு­மல்­லாது, தொற்­று­நோய் தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாடு சட்­டத்­தின்­கீழ் அவர்­கள் குற்­றம் சாட்­டப்­ப­ட­லாம்.

இந்­தக் குற்­றச்­சாட்­டின்­கீழ் அவர்­க­ளுக்கு 1,000 ரிங்­கிட் வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய தொற்று அல்­லது நோயை பரப்­பிய குற்­றத்­தின்­கீழ் கைதா­ன­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­படும்.

நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின் மூன்­றா­வது நிலை தற்­போது நடப்­பில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட ஆணை­யர் அயூப், கட்­டுப்­பாட்­டைப் பொது­மக்­கள் பின்­பற்­று­வதை உறுதி செய்ய இன்­னும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று தெரி­வித்­தார். பொது­மக்­கள் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்றும்

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார். இதற்­கி­டையே, நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­ய­தற்­காக பினாங்­கில் ஏழு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­களில் இரு­வர் இணை­யம் வழி சூதாட்­டத்­தில் ஈடு­பட்­ட­த­தற்­கா­கப் பிடி­பட்­ட­னர்.

இணை­யம் வழி சூதாட்­டத்­துக்கு இரு­வ­ரும் பயன்­ப­டுத்­திய பொருட்­க­ளை­யும் அவர்­க­ளி­டம் இருந்த பணத்­தை­யும் போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர். சாலை­களில் சோத­னைச்­சா­வ­டி­களை அமைத்து சோதனை நடத்­தி­ய­போது வீட்­டை­விட்டு வெளியே வந்­த­தற்­கான கார­ணத்தை விளக்க முடி­யாமல் இருந்த ஐவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பினாங்கு போலி­சார் தெரி­வித்­த­னர். நண்­பர்­க­ளைச் சந்­திக்க வெளியே வந்­த­தாக சிலர் கூறி­யதை போலி­சார் சுட்­டி­னர்.

கைது செய்­யப்­பட்ட ஏழு பேரும் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் மேலும் 51 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. மொத்­தம் 5,742 பேருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் 98 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!