மலேசியா: மன்ற நாயகர் பட்டியலில் தேர்தல் ஆணையர்

பெட்­டா­லிங் ஜெயா: மலேசியாவின் நாடா­ளு­மன்ற நாயகருக்கான பட்டியலில் தேர்தல் ஆணையர் அசார் அஜீசான் ஹாருண் இடம்பெற்றுள்ளார். தற்போதைய நாடாளுமன்ற நாயகரான முக­மட் அரிஃப் முக­மட் யூசுப்பின் இடத்திற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அல்­லா­த­பலர் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

முன்­னாள் நாடாளுமன்ற நாயகர் பாண்­டி­கர் அமீன் முலியா மற்­றும் முன்­னாள் நீதி­பதி ஆகி­யோ­ரும் இந்த பத­விக்கு பரி­சீ­லிக்­கப்­ப­டு­வதாகக் கூறப்படு

கிறது.

வரும் ஜூலை 13ஆம் தேதி நாடா­ளு­மன்­றம் தொடங்­கி­ய­தும் தற்­போ­தைய தேசிய கூட்­டணி நிர்­வா­கம் மன்ற ­நா­ய­கர் முக­மட் அரிஃப் முக­மட் யூசுப் மற்­றும் துணை சபா­நா­ய­கர் எங் கோர் மிங் ஆகி­யோரை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

அவர்­களை நீக்குவதற்கான தீர்­மா­னங்­கள் வெள்­ளிக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்­டன.