வண்ணக் காவடிகளின் அணிவகுப்போடு ஈப்போ கல்லுமலை தைப்பூசத் திருவிழா

மலேசியாவின் பத்துமலையைத் தொடர்ந்து மக்களின் தைப்பூச பக்திக் கடலில் மூழ்கியது ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் கோயில். 

சனிக்கிழமை (பிப்ரவரி 4) மாலை 4 மணிக்கு முன்பே அங்கு மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 

கனத்த மழை பெய்திருந்தாலும்கூட பக்தர்கள் அதைப்பொருட்படுத்தாமல் தங்களின் வேண்டுதலை செலுத்தினர்.  

ஈப்போ கல்லுமலை கோயிலை நோக்கியப் பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல்கள், உணவுக் கடைகள் எனப் பலதரப்பட்டக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாலை தொடங்கிய தேர் ஊர்வலத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஈப்போ அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய தேர் ஊர்வலத்தோடு ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடங்களை ஏந்திச் சென்றனர். 

ஈப்போ கல்லுமலை கோயிலை நோக்கியப் பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல்கள், உணவுக் கடைகள் எனப் பலதரப்பட்டக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

கோயிலின் முன்புறத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றினார் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் துணைத் தலைவர் ஆர். ஜெயமணி. 

இதனிடையே, காவல்துறையினர் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானத்தின் தலைவர் எம். விவேகானந்தா  கேட்டுக் கொண்டார். 

காவல் துறையும் தொண்டூழியப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தினர்.

ஈப்போ கல்லுமலை கோயில் என்றாலே வண்ணக் காவடிகள் பிரசித்தி பெற்றவை.

முந்தைய ஆண்டுகள் போல் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இம்முறை இல்லாத காரணத்தால் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அந்த ஆலயத்தில் இம்முறை நடைபெறும். 

தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவும் வண்ணக் காவடிகளைக் காண்பதற்கும் குடும்பங்களாகப் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!