இந்திய ரயில்வேயின் இணையத்தளத்தை ஊடுருவி தகவல் வெளியிட்ட அல்-காய்தா

இந்தியாவின் ரயில்வே இணையத் தளத்தை அல்-காய்தா பயங்கர வாத இயக்கம் ஊடுருவியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. ரயில்நெட் இணையத்தளத்திற் குள் இந்த இயக்கம் நேற்று முன்தினம் ஊடுருவியதோடு தன்னோடு இணைந்து போராட வரு மாறு இணையவாசிகளைக் கேட்டுக் கொள்ளும் தகவலை அந்த இணையத்தளத்தில் பதிவேற்றியது. அமெரிக்காவையும் அதன் தோழமை நாடுகளையும் தோற்கடிக்க தன்னோடு வந்து சேருமாறு அத்தகவலில் அழைப்பு விடுக் கப்பட்டு இருந்தது. இந்த இணையத்தளம் ஊடுருவப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை என்று சொல்லப்படுகிறது.

மத்திய ரயில்வேயின் பணியாளர் துறை நிர்வாக வசதிக்காக ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன் 'புசல்வால் பிரிவு' பக்கத்தை பயங்கரவாத இயக்கம் ஊடுருவி அதில் தனது இயக்க ஆதரவுத் தகவல்களை வெளி யிட்டது. அவ்வாறு ஊடுருவப்பட்ட தளத்தில் 11 பக்கத் தகவல்களை அந்த இயக்கம் இணைத்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!