இங்கிலிஷ் பிரிமியர் லீக்: அதிர்ச்சி இரவு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுக்களுக்கு நேற்று முன்தினம் இரவு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி என பட்டியலில் முறையே இரண்டு, மூன்று, நான்காம் நிலைகளில் இருக்கும் குழுக்கள் தங்களது ஆட்டங்களில் தோற்றுப் போயின. இந்த முடிவுகள், அதற்கு முதல் நாள் இரவு வெஸ்ட் புரோம் குழு வுடன் சமன் கண்டதால் புலம்பி வந்த லெஸ்டர் சிட்டிக்கு நிம்மதி அளிப்பதாக இருந்தன. கடந்த வார இறுதியில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 3=2 எனத் தோல்வி கண்ட ஆர்சனல், இம்முறை தனது சொந்த எமிரேட்ஸ் அரங்கில் சுவான்சி சிட்டியிடம் 1=2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜோயல் கேம்ப்பெல் அடித்த கோல் மூலம் முன்னிலைக்குச் சென்ற ஆர்சனல் அடுத்த 17 நிமிடங்களில் அந்த முன்னிலையை இழந்தது. 74வது நிமிடத்தில் சுவான்சியின் ஆஷ்லி வில்லியம்ஸ் புகுத்திய கோலால் ஆர்சனல் ரசிகர்களின் முகங்களில் ஏமாற்றம் குடிகொண் டது. "ஆர்சனலுக்குக் கிட்டிய துர திர்ஷ்டவசமான தோல்வி இது. பல வாய்ப்புகளை உருவாக்கியும் அவற்றை கோலாக மாற்றத் தவறி விட்டோம். இந்தத் தோல்வியால் வீரர்கள் நம்பிக்கையை இழந்துள் ளனர்," என்றார் ஆர்சனல் நிர்வாகி வெங்கர். ஆர்சனல் வீரர்கள் உதைத்த பந்து மூன்று முறை எதிரணியின் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி யது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தை வென்றால் கோல் வித்தியாச அடிப்படையில் பட்டியலின் முதலிடத்திற்கு முன் னேறலாம் என்ற கனவில் இருந் தது ஸ்பர்ஸ் குழு.

ஆனால், ஏழாவது நிமிடத்தில் வெஸ்ட் ஹேமின் மிக்கைல் ஆண் டானியோ கோலடித்து ஸ்பர்ஸ் நிர்வாகி பொச்செட்டினோவின் பிறந்த நாளை துக்ககரமானதாக ஆக்கினார். ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலும் இதுதான். கடந்த ஞாயிறன்று இரவு பெனால்டி வாய்ப்புகளில் லீக் கிண்ணத்தை மான்செஸ்டர் சிட்டி குழுவிடம் பறிகொடுத்த லிவர்பூல் குழு இபிஎல் போட்டியில் அதற்குப் பழிதீர்த்தது. ஆடம் லலானா, ஜேம்ஸ் மில்னர், ஃபிர்மினியோ ஆகியோர் கோலடிக்க, 3=0 என்ற கணக்கில் மேன்சிட்டியை மண் கவ்வச் செய்தது லிவர்பூல். இப்படி முன்வரிசை குழுக்கள் வரிசையாக அடிவாங்கியபோதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு மட்டும் அதிர்ஷ்டம் கைகொடுத் தது. 'ஃப்ரீ கிக்' மூலம் யுவான் மாட்டா அற்புதமான கோலைப் புகுத்த, 1=0 என வாட்ஃபர்ட் குழுவை வெற்றி கண்டது மேன்யூ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!