நோம்பென்: சிங்கப்பூர் மேசைப்பந்து குழுக்கள் இன்று (14.5.2023) ஒரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றன.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் கோயென் பாங்-ஐசாக் குவேக் இணை மலேசியாவின் ஜாவென் சூங்-வோங் குயி ஷென் இணையை 3-1 என்னும் புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
இந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் மேசைப் பந்து குழுக்களுக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது தங்கம் இது.
ஆண்களுக்கான போட்டியில் கடந்த வியாழக்கிழமை (11.5.2023) மலேசியாவை 3-1 என்னும் புள்ளி எண்ணிக்கையில் சிங்கப்பூர் தோற்கடித்து தங்கம் வென்றது.
முன்னதாக, நேற்று (13.5.2023) இரண்டு வெள்ளிப் பதக்கங்களை சிங்கப்பூர் மேசைப் பந்துக் குழுவினர் வென்றனர்.
இரட்டையர் கலப்புப் பிரிவில் சிங்கப்பூரின் கிளாரென்ஸ் செவ், ஸெங் ஜியான் 3-1 என்னும் புள்ளி எண்ணிக்கையில் வியட்நாமிடம் வெற்றியைப் பறிகொடுத்து வெள்ளிக்குத் தகுதிபெற்றனர்.
அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஸௌ ஜிங்யி-வோங் ஸிங் ரு இணை தாய்லாந்து இணையிடம் வெற்றிவாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
ஏற்கெனவே மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் மேசைப் பந்தில் மட்டும் சிங்கப்பூர் குழுக்கள் இதுவரை ஏழு பதக்கங்களைக் குவித்துள்ளன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அவை நாளை (15.5.2023) வரை நடக்கும்.
மேசைப்பந்தில் பதக்கம் குவிப்பு
14 May 2023 22:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2023 22:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!