கிரிக்கெட்: உயிர்கொடுக்கும் ஆட்டம்

கோல்கத்தா: கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கூறப்பட்டபோதும் முதல் போட்டி யிலேயே நியூசிலாந்திடம் தோற்று அதிர்ச்சி அளித்தது டோனி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி. இந்நிலையில், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டி இந்திய அணி யைப் பொறுத்தமட்டில் வாழ்வா சாவா ஆட்டம். இன்றைய போட்டி யில் தோற்கும்பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்தே வெளி யேற நேரிடும். ஆனால், தொடக்கத்தில் தடு மாறும் ஒவ்வொரு முறையும் அடுத் தடுத்த போட்டிகளில் இந்தியா வீறுகொண்டு எழுவது வழக்கம். அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானிடம் ஒரு முறைகூட தோற்றதில்லை என்ற வரலாறும் இந்திய அணிக்குச் சாதகமான அம்சம்.

மாறாக, ஐசிசி போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்த முறை இந்தி யாவை வீழ்த்துவது உறுதி என்று சூளுரைத்து, பின்பு தானே மண் ணைக் கவ்வுவது பாகிஸ்தானின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் போட்டி யில் 200க்கும் மேல் ஓட்டம் குவித்து பங்ளாதேஷை வென்று ஆசியக் கிண்ணத் தோல்விக்குப் பழிதீர்த்துள்ளது அந்த அணி. இருப்பினும், எதிரணி இந்தியா என்று வரும்போது அந்த அணி நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறது. ஏற்கெனவே இந்தியாவில்தான் தங்களுக்கு அன்பும் பாதுகாப்பும் அதிகம் கிட்டுகிறது என அஃப்ரிடி கூறியதால் பாகிஸ்தானே கொந் தளித்துப் போய் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் தோற்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் (இடது) - இந்தியாவின் சுரேஷ் ரெய்னா. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!