‘ஓலா டாக்சி’ நிறுவனத்தின் மீது ‘உபர் டாக்சி’ வழக்கு

புது­டெல்லி: 'உபேர் டாக்சி' நிறு­வ­னம் ரூ. 50 கோடி நஷ்­ட­ஈடு கேட்டு 'ஓலா டாக்சி' நிறு­வ­னத்தின் மீது வழக்­குத் தொடர்ந்­துள்­ளது. கைத்­தொலை­பேசி செயலி மூலம் செயல்­படும் டாக்சி நிறு­வ­னங்கள் 'உபர்' மற்­றும் 'ஓலா'. இந்த இரண்டு நிறு­வ­னங்களுக்­கும் இடையே கடுமை­யான போட்டி நிலவி வரு­கிறது. இந்­நிலை­யில் 'உபர்' நிறு­வ­னம் 'ஓலா' மீது டெல்லி உயர்நீதி­மன்றத்­தில் வழக்­குத் தொடர்ந்­துள்­ளது. 'ஓலா' நிறு­வ­னம் போலிக் கணக்­கு­களைத் துவங்கி 'உபர்' நிறு­வன டாக்­சி­களை பதிவு செய்து ஓட்­டு­நர்­களை அலை­ய­விட்டு அதை ரத்து செய்­துள்­ளது. இதற்­கா­கவே 'ஓலா' நிறு­வ­னம் 90,000 போலி கணக்­கு­களைத் துவங்­கி­யுள்­ளது. 'ஓலா' போலிக் கணக்­கு­கள் மூலம் டாக்­சி­களை பதிவு செய்து ரத்து செய்­த­தன் மூலம் 'உபர்' நிறு­வ­னத்­திற்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நாடு முழு­வ­தும் சுமார் 4 லட்­சம் டாக்­சி­களை 'ஓலா' பதிவு செய்து ரத்து செய்­துள்­ள­தாக அந்த வழக்­கில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!