எஸ்எம்ஆர்டி: பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படவில்லை

முஹம்மது ஃபைரோஸ்

பராமரிப்பு ஊழியர்கள் தண்ட வாளத்தைக் கடப்பதற்கு முன்பாக எதிர்வரும் ரயில்களை நிறுத்தி வைக்கும் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. இரவுபகலாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்த விவ ரம் தெரிய வந்ததாக அந்நிறுவனம் கூறியது. பாசிர் ரிஸ் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 24 வயது முகமது அசிரஃப் அக மது புகாரி, 26 வயது நஸ்ருலுடீன் நஜுமுடின் ஆகிய இரு எஸ்எம் ஆர்டி ஊழியர்கள் உயிரிழந்தனர். பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளத்தின் ஓரமாக வரிசை யாக நடந்து செல்ல முதலில் அனு மதி வழங்கப்பட்டது.

பின்னர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு எதிர்வரும் ரயில் நிறுத்தப்படுவதையும் குறிப்பிட்ட இடத்துக்குள் ரயில் நுழையாமல் இருப்பதையும் உறுதி செய்ய ரயில் நிலையத்தில் உள்ள சமிக்ஞை பிரிவுடன் பராமரிப்பு ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த பாதுகாப்பு செயல்முறை பின்பற்றப்பட்டதாக பதிவுகள் காட்டவில்லை என்றது எஸ்எம் ஆர்டி. தண்டவாளத்தில் ஊழியர் களைப் பார்த்தவுடன் ஓட்டுநர் அவசரமாக ரயிலை நிறுத்தினார் என்றும் இருப்பினும் விபத்தைத் தடுக்க முடியவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது. இந்த விபத்துக்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்த எஸ்எம்ஆர்டி, இறந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனு தாபங்களைத் தெரிவித்துக் கொண்டது. இதற்கிடையே, சவூதி அரேபி யாவின் மெக்கா நகருக்கு புனித உம்ரா யாத்திரைக்குச் சென்றிருந்த அசிரஃபின் பெற்றோர் உடனடியாக சிங்கப்பூர் திரும்பினர். அசிரஃப்பின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எஸ்எம்ஆர்டியின் சக ஊழியர் களும் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் உட்பட சுமார் 200 பேர் கெம்பாங்கான் வட்டாரத்தில் உள்ள லெங்கோங் அம்பாட் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!