சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு ‘அர்ப்பணம்’

பொன்விழாக் கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக தமிழகத் திரைத்துறையிலும் சின்னத்திரை யிலும் சாதித்த 26 சிங்கப்பூர் இந்தியர்களைக் கௌரவிக்கும் வகையில் 'அர்ப்பணம்' எனும் நிகழ்ச்சி கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு காலாங் தியேட்டரில் நடைபெற்றது. சிங்கப்பூரின் பிரபலமான மணி மாறன் கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சிறப்பு நிகழ்ச்சி யில் அனைத்துலக அளவில் சிங்கப் பூருக்குப் புகழ் சேர்த்த அந்த 26 பேரின் கலைப் பயணங்களும் தொகுக்கப் பெற்ற 'அர்ப்பணம்' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. மூன்றரை மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில் மணிமாறன் கலைக் குழுவினரின் நடனங்களும் வளர்ந்து வரும் இளம் பாடகர்களின் பாடல் களும் அரங்கம் முழுதும் திரண்டிருந்த பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின. கடந்த ஆண்டில் மறைந்த மனோரமா, எம் எஸ் விஸ்வநாதன் ஆகிய புகழ்பெற்ற தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களை நினைவுகூரும் விதமாக அவர்களது பாடல்களையும் சென்ற மாதம் 24ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு நாள் என்பதால் அவரது நடிப்பில் வெளியான பாடல்களையும் கலைஞர்கள் பாடினர். அத்துடன், கிறிஸ்மஸ் பெரு நாளைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துவப் பாடல்களும் மேடையில் பாடப்பட்டன. நிகழ்ச்சியின் இடையிடையே மாதவி கிருஷ்ணன், சிங்கப்பூர் ரஞ்சனி, வசந்தம் கலைஞர்கள் ஆனந்த கண்ணன், மதியழகன் போன்ற சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த, 'அர்ப்பணம்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கலைஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, அந்தப் புத்தகத்தையும் வழங்கிக் கௌர வித்தார் திரு மணிமாறன். தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகனின் பாடல்களுக்கு நடனக் கலைஞர்களின் நாட்டுப்புற நடனங்கள் அரங்கம் முழுதும் திரண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப விருந்தாய் அமைந்தது. படம்: மணிமாறன் கிரியேஷன்ஸ் படம்: மணிமாறன் கிரியேஷன்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!