கேர்‌ஷீல்டு லைஃப்: தெரிந்துகொள்ள வேண்டியவை

வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து 30 வயதும் அதற்கு மேற்பட்டோரும் எல்டர் ‌ஷீல்டுக்குப் பதிலாக இடம்பெறும் நீண்டகாலப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டமான கேர்‌ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேரவேண்டி இருக்கும். கேர்‌ஷீல்டு பற்றி பொதுமக்களுக்கு இருக்கும் கேள்வி களையும் அவற்றுக்கான பதில்களையும் சற்று ஆராய்வோம்.

எனக்கு ஏற்கெனவே மெடி‌ஷீல்டு லைஃப் உள்ளது. எனக்கு கேர்‌ஷீல்டு லைஃப் ஏன் அவசியம்?

விலை அதிகமுள்ள மருத்துவமனைக் கட்டணங்களுக்கும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு விலைமிக்க மருத்துவ சிகிச்சைகளுக்கும் மெடி‌ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் நிதி வழங்குகிறது. உங்களுக்கு கடுமையான உடற்குறை ஏற்பட்டு நீண்டகாலப் பராமரிப்பு தேவைப் படுமாயின் கேர்‌ஷீல்டு லைஃப் திட்டம் நிதி உதவி வழங்கும். வழங்கு தொகை (payout) மாதந்தோறும் வழங்கப்படும். அதைப் பெறுபவர்கள் பணிப்பெண், பகல்நேரப் பராமரிப்பு போன்ற சேவை களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வழங்கு தொகைகள் எவ்வாறு வழங்கப்படும்?

அன்றாட வாழ்வில் செய்யும் பொது வான ஆறு நடவடிக்கைகளில் குறைந்தது மூன்றில் பிறரது உதவி தேவைப்பட்டால் வழங்கு தொகை பெற தகுதி பெறுவீர்கள். குளிப்பது, ஆடை மாற்றுவது, சாப்பிடுவது, கழிவறைக்குச் செல்வது, படுக்கையி லிருந்து நாற்காலிக்கு இடம் மாறுவது, ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் செல்வது ஆகியவை இந்த ஆறு நடவடிக் கைகள்.

உங்களது இயலாமையை உறுதி செய்ய மருத்துவர், தாதி, உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர், தொழில் சார்ந்த சிகிச்சை நிபுணர் போன்ற சுகாதாரப் பரா மரிப்பு ஊழியர்கள் வழங்கும் சான்றிதழ் வேண்டும். முதல்முறை மதிப்பீடு செய்தால் கட்டணம் இலவசம். ஆனால் குறைந்தது மூன்று நடவடிக்கைகளில் பிறரது உதவி தேவை என்று மதிப்பீட்டில் தெரிய வராமல் மேலும் சில மதிப்பீடுகள் செய்ய வேண்டி வந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, வழங்கு தொகை பெற தகுதி பெற்றால் மதிப்பீடுகளுக்காக நீங்கள் செலுத்திய கட்டணத் தொகை கேர்‌ஷீல்டு லைஃப் வாயிலாகச் திருப்பிக் கொடுக்கப்படும்.

மேலும்