விரைவில் முடிவுக்கு வருகிறது ‘யாஹூ’ குறுந்தகவல் சேவை

உலகிற்கு முதன் முதலாக குறுந் தகவல் சேவையை வழங்கிய ‘யாஹூ மெசன்ஜர்’ அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது ஒத் இன்க் நிறுவனம். ‘யாஹூ’ மின்னஞ்சல் மற்றும் இதர சேவைகளைப் பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. ‘வாட்ஸ்அப்’, ‘ஃபேஸ்புக் மெசஞ்சர்’ மற்றும் இதர குறுந் தகவல் செயலிகளின் ஆதிக்கம் காரணமாகவே ‘யாஹூ’ இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கி றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) ‘மெசஞ்சர்’’ சேவையை நிறுத்தியது.

தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ‘யாஹூ’ நிறுவ னம் ‘ஸ்கூரில்’ எனும் குறுந்தகவல் செயலியைச் சோதனை செய்தது. அந்த வகையில் இந்தச் செயலி ‘யாஹூ மெசஞ்சருக்கு’ மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்தப் புதிய ‘மெசஞ்சர்’’ செயலி மூலம் மேற்கொள்ளப்படும் உரையாடலை அடுத்த ஆறு மாதங்களுக்கு பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவித்துள்ளது.