தோல்வியின் பிடியிலிருந்து மீள முயலும் மேன்யூ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் 1987 ஆம் ஆண்டிற்குப் பின் ஆக மோச மான தொடக்கத்தைத் தவிர்க்க முனைகிறது மான்செஸ்டர் யுனை டெட் குழு. நடப்பு பருவத்தில் இதுவரை மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ள அக்குழு மூன்று புள்ளிகளுடன் பட்டியலில் 13வது இடத்திலுள்ளது. பட்டியலில் 18வது இடத்தில் உள்ள பர்ன்லி குழுவுடன் இன்று இரவு பொருதவுள்ள யுனைடெட், ஆட்டத்தை வென்றே தீரவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. கடந்த வாரம் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு விடம் 3=0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் மோசமாகத் தோற்றது. இப்பருவத்தில் பர்ன்லி குழு விளையாடிய ஆட்டங்களின் முடிவு களும் அதற்குச் சாதகமாக அமையவில்லை. இதுவரை அது விளையாடிய மூன்று ஆட்டங்களில் ஒன்றைச் சமன் செய்து, இரண்டில் தோல்வியுற்றது.

இன்று நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல், கார்டிஃப் சிட்டி குழுக்கள் மோதுகின்றன. கார்டிஃப் மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் புது நம்பிக்கை யுடன் களமிறங்குகிறது ஆர்சனல். இப்பருவத்தில் முதல் இரு ஆட்டங் களில் தோல்வி கண்ட நிலையில், தனது சொந்த எமிரேட்ஸ் அரங் கில் நடந்த கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் அணியை 3=1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. உனாய் எமெரி அக் குழுவின் நிர்வாகியானதைத் தொடர்ந்து முதல் இரு ஆட்டங் களில் புள்ளிகள் பெறாத வேளை யில், இந்த வெற்றி அவருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. பிரிமியர் லீக்கில் இதுவரை ஆர்சனல், கார்டிஃப் அணிகள் மோதிய இரு ஆட்டங்களிலும் ஆர்சனலே வென்றது. இன்றிரவு நடக்கவுள்ள இன் னோர் ஆட்டத்தில் வாட்ஃபர்ட், டோட்டன்ஹம் குழுக்கள் பொருது கின்றன. ஸ்பர்சைப் போலவே முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்றுள்ள வாட்ஃபர்ட், ஸ்பர்சுக் குப் பெரும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது