பல இனத்தவர் பங்கேற்ற ஆனந்த பொங்கல் 

பொங்கல் பண்டிகையை இந்தியர்கள் மட்டுமின்றி சீன, மலாய் இனத்தவர்களும் கொண்டா டலாம் என்பதற்குச் சான்றாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தோ பாயோ வட்டாரத்தில் பொங் கல் கொண்டாட்டங்கள் நடைபெற் றன. தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 200 தோ பாயோ வட்டாரக் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களோடு மசெக சமூக அறநிறுவனத்தின் பாலர் பள்ளியைச் சேர்ந்த சிறார்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மெருகூட் டினார்.
"சிங்கப்பூரில் விவசாயம், அறுவடை இல்லாவிட்டாலும் நமக்குக் கிடைக்கும் உணவுக்காக நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக பொங்கல் அமைகிறது," என்று டாக்டர் இங் கூறியதாக தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திரு கருணாநிதி லட்சுமணன், 50 கூறினார்.
இது தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்றம் வழிநடத்தும் முதல் பொங்கல் கொண்டாட்டம் என்றும் பல இனத்தவர்கள் இந்திய கலாசாரத்தை அனுபவிக்கும் தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்றும் திரு கருணாநிதி குறிப்பிட்டார்.
பொங்கல் கொண்டாட்ட உணர்வை வழங்கும் வகையில் கரும்பு சாப்பிடுவது, பூ தொடுப்பது, பாரம்பரிய முறையில் பொங்கல் வைப்பது, கிராமிய இசைக்கு அபிநயம் பிடித்த கரகாட்டம், நாட்டுப்புற நடனம், மயில் நடனம் போன்ற பல அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
"விடுமுறை நாளான ஞாயிற் றுக்கிழமைகளில் காலையிலேயே குழந்தைகளை எழுப்பி ஒரு நிகழ்ச்சிக்கு வரவைப்பது எளி தல்ல. இருப்பினும், உற்சாகத்துடன் பல சிறார்களும் குழுந்தைகளும் வந்து ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப் பார்க்க இதமாக இருந்தது," என்றார் அந்த மூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு உறுப்பினரான திருமதி தமிழ்ச்செல்வி சண்முகம், 37.
"குடும்பமாக பாரம்பரிய உடைகளை அணிந்து, கோலம் வரைந்து வண்ணம் தீட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்திய கலாசாரத்தோடு என் குடும்பம் மேலும் நெருக்கம் கண்டது," என்றார் அவர்.

ஆனந்த பொங்கல்
சி யுவான் சமூக மன்றத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் திருவிழா கொண்டாடப் பட்டது. சி யுவான் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் கலந்துகொண்டார்.
பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டிகளும் பொங்கல் வைப்பது, பானைகளுக்காக வண்ணம் தீட்டி அலங்கரித்தல் போன்ற அங்கங்களும் சி யுவான் வட்டார குடியிருப்பாளர்களுக்கு நடத்தப்பட்டன. மாணவர்களின் நாடகப் படைப்பு, சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், கிராமிய இசை போன்ற அம்சங்களோடு கலைநிகழ்ச்சியும் படைக்கப் பட்டது.
"கிராமத்து பாரம்பரிய கலாசா ரங்களையும் விழுமியங்களையும் வரும் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நவீன காலத்தில் வளரும் தலைமுறையினர் நமது கலாசாரத்தை மறக்கக்கூடாது. அதைக் கற்பிக்க இதுபோன்ற நிகழ்வுகள் முக்கியம்," என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு சோ.ராமநாதன், 38.

முதியோர்களை மையப்படுத்திய பொங்கல் விழா
முதியோரை மையப்படுத்தி கடந்த மாதம் 17ஆம் தேதியன்று ஹவ்காங் புளோக் 1ல் கிட்டத்தட்ட 50 முதியவர்கள் கலந்துகொண்ட பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹவ்காங் சமூக மன்றத்தின் இந்தியர் நற் பணிச் செயற்குழுவும் 'சன்லவ்' இல்லமும் இணைந்து இந்நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந் தினராக ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு லீ ஹொங் சுவான் கலந்து கொண்டார்.
முதல்முறையாக முதியோர்க ளுடன் இதுபோன்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண் டதாகக் குறிப்பிட்டார் அவர்.
"பல இனங்களைச் சேர்ந்த முதியோர் பொங்கலைப் பற்றி தெரிந்துகொண்டனர். அவர்கள் பொங்கல் தயாரிப்பில் ஈடுபட்ட தோடு இந்திய உணவையும் வாழை இலையில் உண்டு மகிழ்ந்தனர். முதியோர்கள் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருந்தனர்," என்றார் ஹவ்காங் சமூக மன்றத்தின் இந்தியர் நற் பணிச் செயற்குழு உறுப்பினரான திரு கா.ராஜமோகன், 58.

தோ பாயோவில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் தேங்காய் உடைக்கும் போட்டி நடத்தப்பட்டது. படம்: தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!