‘நெடுநேரம் பணிபுரியும் பெண்களுக்கு நீரிழிவு அபாயம் 70% அதிகம்’

நீண்ட நேரம் பணிபுரியும் பெண் களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என அண்மைய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், நீண்ட நேரம் பணிபுரியும் ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.

வாரம் ஒன்றுக்கு 45 மணி நேரம் அல்லது அதற்கும் அதிக மாகப் பணிபுரியும் பெண்களை, வாரத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் பணிபுரியும் பெண்கள், ஆண்கள் ஆகியோருடன் ஒப் பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் வாரத்துக்கு 45 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் வேலை செய்யும் பெண்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் 70% அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்வதுடன் வீட்டிலும் வேலை செய்வது, குடும்பத்தைப் பராமரிப்பது ஆகியவை கார ணமாக அவர்களது மன அழுத்தம் அதிகரிப்பது நீரிழிவு அபாயம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக ஹார்மோன் சுரப்பு, இன்சுலின் எதிர்ப்பு போன் றவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக வேலை நேரம் இருந்தால் உடற்பயிற்சி உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த நடவடிக்கை களுக்கு நேரம் ஒதுக்க இயலாமல் போவதுடன் சரியான நேரத்தில் முறையான உணவருந்த இயலாமல் போகும் போக்கும் அதிகரிக்கிறது. நீரிழிவு ஏற்படுவதற்கு இவையும் வழிவகுக்கும் என்று கூறப்படு கிறது. ஆனால், ஆண்கள் அதிக நேரம் பணிபுரிந்தால் அவர்களுக்கு நீரிழிவு ஏற்படுவது குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்கவும்: நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் முளைகட்டிய வெந்தயம்

“உலக அளவில் நீரிழிவினால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், நீரிழிவு அல்லது அது தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான, அதேசமயம் மாற்றிக்கொள்ளக் கூடிய காரணங்களைக் கண்டறி வது அவசியமாகிறது. நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்களி டையே நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதை அறிந்தால் அத னைத் தவிர்க்கக்கூடிய நடவடிக் கைகளை எடுப்பதுடன், கொள்கை அளவிலான முடிவுகளை எடுப்பதற் கும் இத்தகைய ஆய்வுகள் உத வும்,” என்று கனடாவைச் சேர்ந்த லாவல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிலைய வல்லுநர் மஹீ கில்பர்ட் ஓயிமெட் கூறியுள்ளார்.

‘பிஎம்ஜெ ஓபன் டையபெடிஸ் ரிசர்ச் அண்ட் கேர்’ எனும் சஞ்சிகையில் வெளியான ஆய் வில், 35 முதல் 74 வயது வரையிலான 7,065 பேர் 12 ஆண்டுகள் ஆய்வுக்குட்படுத்தப் பட்டனர். அவர்கள் வேலை செய்த நேரத்தின் அடிப்படையில் வாரத் துக்கு 15 முதல் 34 மணி நேரம், 35 முதல் 40 மணி நேரம், 41 முதல் 44 மணி நேரம், 45 அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்தவர்கள் என நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டனர்.

ஆண்களிடையே, வயது அதிகமானவர்களுக்கும் உடற்பருமன் அதிகமாக இருந்தவர்களுக்கும் மட்டுமே நீரிழிவு ஏற்பட்டது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!