வெள்ளத்தால் இந்தியாவில் குறைந்தது 244 பேர் பலி

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை குறைந்தது 244 பேர் உயிர் இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் வரும் பருவ மழைக்காலத்தினால் ஏற்படும் மரணங்கள் தேசிய அளவில் இவ்வாண்டு குறைந்தபட்சம் 244-ஐ எட்டியுள்ளது. இச்சூழ்நிலையில் கேரளாவின் தென் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 லிருந்து 48 மணி நேரத்திற்குள் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கேரளா உட்பட கர்நாடகா, மஹராஷ்ட்ரா, குஜராத் ஆகிய நான்கு இடங்களில் கனத்த மழைப் பெய்துள்ளதால் அங்கு வசிக்கும் 1.2 மில்லியனுக்கு மேலான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசாங்கம் அமைத்துள்ள உதவி முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்ற ஆண்டின் மிக மோசமான மழை தாக்குதலால் ஏற்பட்ட பொது கட்டமைப்பு, சாலை, ரயில் பாதை சேதங்களிலிருந்தும் உயிரிழப்புகளிலிருந்தும் கேரளா இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது குறிப்படத்தக்கது.

சென்ற ஆண்டின் கடுமையான வெள்ளதால் சுமார் 450 அங்கு உயிரிழந்துள்ளனர்.

இம்முறை வந்துள்ள பருவ மழையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 95ஆக உயர்ந்துள்ளன என்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேரளாவின் காவல் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

ஆதற்கு பக்கத்தில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடுமையான வெள்ளத்தால் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 677,000 பேரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

குஜராத், மஹராஷ்டாவின் மேற்கு மாநிலங்களில் 66 உரியிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததுடன் நூற்றுக்கனக்கான ஆயிர மக்கள் காப்பாற்றப்பட்டது குறித்தும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

தேடல், மீட்பு, உதவி பணிகளில் உள்ளூர் அவசர காலப் பிரிவுடன் இராணுவப் படை, ஆகாயப்படை, கடற்படை ஆகியவற்றை இணைந்து ஈடுபட இந்தியா ஏற்பாட்டு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!