நிர்பயா கொலை வழக்கு: கருணை மனுவை நிராகரிக்க அமைச்சர் பரிந்துரை

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்கும்படி டெல்லி அரசாங்கம் “வலுவாகப் பரிந்துரை” செய்திருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அடங்கிய கோப்பை லெப்டினன்ட் கவர்னர் அனில் பய்ஜலுக்கு அனுப்பி இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிய வந்துள்ளது.

மருத்துவ மாணவியான 23 வயது நிர்பயாவை 2012ஆம் ஆண்டு கொடூரமான முறையில் கும்பலாகப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வினய் ஷர்மா. இவர் அதிபர் ராம் நாத் கோவிந்திடம் கருணை மனு தாக்கல் செய்திருக்கிறார்.

“விண்ணப்பதாரர் (வினய் ஷர்மா) மிகவும் கொடூரமான குற்றம் புரிந்திருக்கிறார். இதுபோன்ற அட்டூழியங்களை மற்றவர்கள் செய்யாமல் தடுப்பதற்கு இத்தகைய தண்டனை விதிப்பது அவசியம்,” என திரு ஜெயின் கோப்பில் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

கருணை மனுவுக்கு எத்தகைய அடிப்படையும் இல்லாததால், அதனை நிராகரிக்க அமைச்சர் வலுவாகப் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தொடர்பில் கைதானதிலிருந்து வினய் ஷர்மா திஹார் சிறையில் இருக்கிறார். மற்றொரு குற்றவாளியான முகேஷ் இதனை மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிர்பயா 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-17 தேதிகளில், தென் டெல்லியில் ஓடும் பேருந்தில் அறுவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கொடூரமாகத் தாக்கப்பட்ட நிர்பயா, பேருந்திலிருந்து சாலையில் வீசி எறியப்பட்டார்.

டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்ட நிர்பயா, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் டிசம்பர் 29ஆம் தேதி காலமானார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இளம் குற்றவாளியான மற்றொருவருக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனையை எதிர்நோக்கும் நான்காமவரான அக்‌ஷய் குமார் சிங், 33, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!