‘யார் வந்தாலும் தோற்கடிப்போம்’

லண்டன்: இறுதிப் போட்டியில் தங்களை எதிர்த்து யார் விளையாடி னாலும் கவலையில்லை, அவர் களை வீழ்த்தி லீக் கிண்ணத்தைத் தாங்கள் கைப்பற்றுவது உறுதி எனச் சூளுரைத்துள்ளார் லிவர்பூல் காற்பந்துக் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப். நேற்று அதிகாலை நடந்த அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் லிவர்பூல் 0=1 என ஸ்டோக் சிட்டியிடம் தோற்றது. ஆனால், முதல் அரையிறுதி ஆட்டத்தில் இதே கோல் வித்தி யாசத்தில் லிவர்பூல் வென்றிருந்த தால் இறுதிச் சுற்றில் நுழைவது யார் என்பதை முடிவு செய்ய பெனால்டி வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது.

இதில், கோல்காப்பாளர் சிமோன் மின்யோலே ஸ்டோக் சிட்டியின் இரு வாய்ப்புகளை அற்புதமாகப் பாய்ந்து தடுக்க, 6=5 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட் டிக்குள் நுழைந்த முதல் குழு என்ற பெருமையைப் பெற்றது லிவர்பூல். போட்டிக்குப் பின் பேசிய லிவர்பூல் நிர்வாகி யர்கன் க்ளோப், "மான்செஸ்டர் சிட்டியோ எவர்ட் டனோ, யார் வந்தாலும் எங்களுக் குக் கவலையில்லை. நாங்கள் கிண்ணம் வெல்வது உறுதி," என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் லிவர்பூல் ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!