ஊழியர்களைத் தக்கவைக்க உதவி

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் ­கீழ் 140,000க்கும் மேற்­பட்ட முத­லாளி களுக்கு இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து $5.5 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான வழங்­கீட்­டுத் தொகை வழங்­கப்­படும்.

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் அவற்­றின் ஊழி­யர்­களை ஆட்­கு­றைப்பு செய்­யா­மல் தக்­க­வைக்க இந்த நிதி வழங்­கப்­ப­டு­கிறது.

ஏறத்­தாழ 1.9 மில்­லி­யன் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் கொடுக்க இந்­தத் தொகை உத­வும் என்று நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இந்த $5.5 பில்­லி­ய­னு­டன் சேர்த்து, வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் $21.5 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்படு­வ­தாக நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

கடந்த பிப்­ர­வரி மாதத்­தில், முதலாவது வர­வு­செ­ல­வுத் திட்ட ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தில் வேலை ஆத­ர­வுத் திட்­டத்தை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

அதை­ய­டுத்து, அடுத்­த­டுத்த தொகுப்­புத் திட்­டங்­களில் வேலை ஆத­ர­வுத் திட்­டம் மேம்­ப­டுத்­தப்­பட்­டது. ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் நிரந்­த­ர­வா­சிக்­கும் வழங்­கப்­படும் சம்­ப­ளத்­தின் முதல் $4,600க்கு இந்த நிதி­யு­தவி பயன்­ப­டுத்­தப்­படும்.

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நிறு­வ­னங்களின் ஊழி­யர்­க­ளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சம்­ப­ளம் வழங்க திட்­டம் விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டது. நெருக்­க­டி­

நி­லையை நன்கு சமா­ளித்து வரும் துறை­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு, வரும் டிசம்­பர் மாதம் வரை வேலை ஆத­ர­வுத் திட்ட நிதி மூலம் சம்­ப­ளம் வழங்­கப்­படும். ஊழி­யர்­க­ளின் கடந்த ஜூன் மற்­றும் ஆகஸ்ட் மாத சம்­ப­ளத்தை ஈடு­செய்ய இம்­

மா­தம் வழங்­கப்­படும் தொகை பயன்­ப­டுத்­தப்­படும் என்று நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணையமும் கூறின.

விமா­னப் போக்­கு­வ­ரத்து, சுற்­றுப்­ப­ய­ணம், மனி­த­னால் உரு­வாக்­கப்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த முத­லாளிகளுக்கு 75 விழுக்­காடு ஆத­ரவு வழங்­கப்­படும். உண­வுச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம், கலை­கள், பொழு­து­போக்கு, நிலப் போக்­கு­வ­ரத்து, கடல்­துறை, கட­லோ­ரத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த முத­லா­ளி­க­ளுக்கு 50 விழுக்­கா­டும் மற்ற துறைகளின் முத­லா­ளி­க­ளுக்கு 25 விழுக்­கா­டும் கிடைக்­கும்.

கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் முடி­வ­டைந்­தும் பணி­க­ளைத் தொடர அனு­மதி பெறாத துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்குப் பணி­க­ளைத் தொடர முடி­யாத கால­கட்­டத்­தில் ஏற்­பட்ட இழப்பை ஈடு­செய்ய 75 விழுக்­காடு ஆத­ரவு வழங்­கப்­படும். தகுதி பெறும் முத­லாளி

களுக்குத் தபால் மூலம் அவர்களது வழங்­கீட்­டுத் தொகை தெரி­விக்­கப்­படும். myTax இணை­ய­வா­ச­லுக்­குச் சென்­றும் அவர்­கள் தங்­கள் வழங்­கீட்­டுத் தொகை­யைப் பற்றி தெரிந்­து­கொள்­ள­லாம். இந்­தச் சிர­ம­மிக்க காலகட்­டத்­தில் ஊழி­யர்­க­ளைத் தக்­க­வைக்க தங்­க­ளால் ஆன அனைத்­தை­யும் முத­லா­ளி­கள் செய்ய வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தமது ஃபேஸ்புக்­கில் நேற்று பதி­விட்­டார். வேலை­க­ளுக்­குத் தொடர்ந்து முன்­னு­ரிமை தரப்­ப­டு­வ­தா­க­வும் உள்­ளூர் ஊழி­யர்­கள், குறிப்­பாக நடுத்­தர வய­தி­னரை வேலை­யில் அமர்த்த வளர்ச்சி கண்டு வரும் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்க, வேலை வளர்ச்சி சலு­கையை வழங்­கு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!