ஜனவரி மாதத்தில் 2,441 பேருக்கு டெங்கி பாதிப்பு

ஜனவரி மாதத்­தில் மொத்தம் 2,441 பேர் டெங்கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்ள தாக தேசிய சுற்­றுப்­புற வாரியம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. பொதுவாக ஜனவரி மாதத்­தில் டெங்கி நோய் பரவல் இவ்­வ­ளவு அதிகம் இருப்­ப­தில்லை என்றும் இது வழக்­கத்தை­விட அதிகம் என்றும் அறிக்கை குறிப்­பிட்­டது. ஜனவரி 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை­யி­லான காலத்­தில் 636 டெங்கி பாதிப்­பு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்கு முந்திய வாரத்­தி­லும் இதே அளவு டெங்கி பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன. மேலும் ஜனவரி மாதத்­தில் 47 வயது சிங்கப்­பூர் ஆடவர் டெங்கி பாதிப்­பால் உயி­ரி­ழந்தார். மார்­சி­லிங் ரைசில் வசித்த அவர், ஜனவரி 22ஆம் தேதி மாண்டர்.

எல்­நி­னோ­வினால் ஜனவரி சற்று வெப்­ப­மாக இருந்தது கொசு இனப் பெருக்­கத்­துக்­கும் டெங்கி நோய் அதி­க­ரிப்­புக்­கும் கார­ண­மாக இருக்­க­லாம் எனக் கரு­தப்­படு­கிறது. தற்போதைய பருவநிலை கொசு இனப் பெருக்கத்துக்கு சாதகமாக இருப்பதால் நோய் மேலும் பர­வா­மல் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மக்­களை சுற்­றுப்­புற வாரியம் கேட்டுள்ளது. டெங்கி குறித்த கடைசி நிலவரங்களை www.de­n­g­ue.gov.sg என்ற இணையத் தளத்­தில் அல்லது my­E­NV செயலி வழி தெரிந்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!