வேலை தேடுவோரை விட காலி இடங்கள் அதிகம்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வேலை காலி இடங்களின் எண் ணிக்கை சுருங்கியது. இருப்பி னும் வேலை தேடுவோரைக் காட் டிலும் காலியாக இருந்த இடங் களின் எண்ணிக்கை அதிகம் என்று மனிதவள அமைச்சு தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் வரை வேலை தேடிய ஒவ்வொரு 100 பேருக்கும் 116 காலி இடங்கள் இருந்தன. இந்த இடங்களின் எண்ணிக்கை இதற்கு முந்திய காலாண்டில் 121 ஆகவும் அதற்கு முந்திய மூன்று மாதங்களில் 143 ஆகவும் இருந்தன. ஒட்டுமொத்தமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் 60,000 வேலைகள் ஆட்கள் நிரப்பப்படா மல் இருந்தன. இந்த எண் ணிக்கை 2014ஆம் ஆண்டில் 67,400ஆக இருந்தன. காலி இடங்களின் எண் ணிக்கை வீழ்ச்சியடைந்ததற்கு மெதுவடைந்த பொருளியல் நில வரம் ஒரு காரணம் என 2015ல் வேலை காலி நிலவரம் தொடர் பான புள்ளிவிவர அறிக்கையை அமைச்சு நேற்று வெளியிட்டது.

கடந்த ஆண்டில் பத்தில் நான்கு வேலைகள் (அல்லது 43 விழுக்காடு) பிஎம்இடி என்று சொல்லப்படுகிற நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற் றும் தொழில்நுட்பர்கள் துறைக்குச் சென்றன. ஆசிரியப் பணி, வர்த்தக=சந்தை நிர்வாகப் பணி, மென்பொருள் மேம்பாடு போன் றவை தொடர்பான வேலைகள் அவை. இதற்கடுத்ததாக சேவைத் துறை இருந்தது. உணவக உத வியாளர்கள், சில்லறை விற்பனை உதவியாளர்கள், பாதுகாவலர்கள் போன்ற பணிகளை உள்ளடக்கிய சேவைத் துறைக்கும் ஆட்கள் தேவைப்பட்டனர். அந்தத் துறையில் 12,270 இடங்கள் காலியாக இருந்தன. மொத்த காலி இடங்களில் இது 23 விழுக்காடு. இத்தகவல்களைத் தெரிவித்த அமைச்சு, துப்புரவாளர் பணி களையும் சிங்கப்பூரர்கள் தவிர்க் கும் வேலைகளையும் நிரப்புவது கடினமாக இருந்ததை ஒப்புக் கொண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!