ஹாக்கி ஆசிய வெற்றியாளர் விருது: வெண்கலம் வென்றது மலேசியா

குவாந்தான்: ஆசிய வெற்றியாளர் விருது ஹாக்கிப் போட்டியில் மலேசியா தென்கொரியாவை வென்று வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இதில் வழக்கமான போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்த ஆட்டத்தில் மலேசியாவுக்கான கோலை ஷாஹ்ரில் சாபாவும் தென்கொரியாவுக்கான கோலை அந்த அணியின் தலைவர் ஜுங் மன்ஜேயும் போட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர், இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்புகளில் மலேசியா மூன்று பெனால்டி வாய்ப்புகளை கோல்களாக மாற்றியது. இதற்கு நேர்மாறாக, தென்கொரியா தான் எடுத்த நான்கு பெனால்டி வாய்ப்புகளில் மூன்றை கோல்களாக்கத் தவறி தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து மலேசிய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சுவீடன் வீரர் மைக்கல் லஸ்டிக் வலையை நோக்கி பந்தை உதைக்க (இடது), அதைத் தடுக்க முயல்கிறார் ஸ்பெயின் அணியின் மிக்கெல் ஒயர்ஸபெல் (நடுவில்). படம்: இபிஏ

17 Oct 2019

ஒருவழியாய்க் கரைசேர்ந்த ஸ்பெயின்

உஸ்பெகிஸ்தான் வீரருடன் பந்துக்குப் போராடும் சிங்கப்பூரின் இக்‌சான் ஃபாண்டி (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Oct 2019

சிங்கப்பூர் துணிச்சல் ஆட்டம்