விளக்குக் கம்பத்தில் மோதிய காவல்துறை வாகனம்

சாலைத் தடத்தைவிட்டு விலகி ஓடிய போலிஸ் கார் ஒன்று விளக்குக் கம்பத்தின் மீது மோதிய சம்பவம் டோர்செட் ரோட்டில் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் பிற்பகலில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. குளோஸ்டர் ரோட்டை நோக்கிச் செல்லும் டோர்செட் சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை பிற்பகல் 2.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸ், அங்கு போலிஸ் காரும் மற்றொரு காரும் மோதி விபத்துக் குள்ளானதை உறுதிப்படுத்தியது.

போலிஸ் காரின் பின்புறக் கதவை மற்றொரு கார் இடித்ததால் போலிஸ் கார் திசைமாறி சாலையை விட்டு விலகி ஓடியதாக அறியப் படுகிறது. அந்த வேகத்தில் அருகில் இருந்த நடைபாதையில் ஏறி ஓடிய போலிஸ் கார் அங்கிருந்த விளக் குக் கம்பத்தில் மோதி நின்றது. சம்பவ நாளன்று பிற்பகல் 2.45 மணிக்கு அருகிலிருந்த கடைக் குச் சென்றபோது டோர்செட் ரோட் டில் ஒரு போலிஸ் கார் தம்மைக் கடந்து போனதைக் கண்டார் திரு பிரசாந்த் தடாத்தில், 36. சில நொடிகளுக்குப் பின், 'டமார்' என பலத்த சத்தத்தைத் தாம் கேட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் சொன்னார் திரு பிரசாந்த்.

போலிஸ் கார் ஒன்று விளக்குக் கம்பத்தின் மீது மோதிய சம்பவம் டோர்செட் ரோட்டில் நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!