தங்கம் வென்ற ‘சங்கே முழங்கு’; பிளாட்டினம் வென்ற ‘சாதனா’ திட்டம்

வி­ஜ­ய­கு­மார் அருள் ஓஸ்வின் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களையும் மாணவ மன்றங்களையும் அங்கீகரிக்கும் மாணவர் சாதனையாளர் விருது விழா 2016ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மீண்டும் பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்ற மாதம் 29ஆம் தேதியன்று பல்கலைக்கழக கலாசார மையத்தில் 11வது முறையாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்ப் பேரவையின் 36வது செயற்குழுவுக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. சமூக சேவை, கலை, கலாசாரம், புது முயற்சி, போட்டி, தலைமைத்துவம், பல்கலைக்கழகத் துடிப்புமிக்க மன்றம் என்று மொத்தம் ஆறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு பல்கலைக்கழக கலாசார மைய அரங்கில் 3,000 பேர் முன்னிலையில் அரங்கேறிய 'சங்கே முழங்கு' மேடை நாடகம், கலை, கலாசாரப் பிரிவின் தங்க விருதைத் தட்டிச்சென்றது. "மற்ற இனத்தவர்களும் சங்கே முழங்கு நாடகத்தின் சிறப்பை உணர்ந்தனர். இந்த விருதை எங்களுக்கு வழங்கியுள்ளது பெருமையாக இருக்கிறது," என்றார் சங்கே முழங்கின் தயாரிப்பாளரான ஜெய்ஸ்ரீ, 23.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களையும் மாணவர் மன்றங்களையும் அங்கீகரிக்கும் விதத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் 'சங்கே முழங்கு' நிகழ்ச்சிக்கு தங்க விருதையும் 'சாதனா' துணைப்பாட வகுப்புகளுக்காக பிளாட்டின விருதையும் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 36வது செயற்குழு உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!