சிபிஐ மிரட்டுகிறது: கெஜ்ரிவால் பகிரங்க புகார்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை சிபிஐ மிரட்டுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த பகிரங்க குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டு மல்லாமல், பல்வேறு நிலைகளில் உள்ள இதர அதிகாரிகள் என சேர்த்து மொத்தம் 77 அதிகாரிகளை சிபிஐ தனது மிரட்டல் பட்டியலில் வைத்திருப்பதாகச் சாடினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு தமக்கு எதிராக சிபிஐயை தூண்டிவிடுவதாகக் கூறிய அவர், அதன் காரண மாகவே தமது முதன்மைச் செய லர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறினார்.

"இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் எனது அரசு மயிரிழையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிபிஐ எனது முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாரை குறிவைத்து இருக்கிறது. அவர்தான் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு ஒப்பந்தப் புள்ளிகள் விடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். "இப்போது எனது அலுவலகத்தில் தற்காலிக அடிப்படை யில் பணிபுரியும் பல அதிகாரி களை சிபிஐ வரவழைத்து நாள் முழுவதும் காத்திருக்க வைத்து அவர்களிடம் எனது செயல்பாடு கள் பற்றி விசாரிக்கிறது," என்றார் கெஜ்ரிவால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!