நடிக்க வந்திருக்கும் புதிய மருத்துவர்

'பவர் ஸ்டார்' டாக்டர் சீனிவாசனுக்கு ஈடுகொடுக்க வந்துள்ளார் இன்னொரு மருத்துவர். பெயர் பரத் விஜய். ஆனால் பவர் போல இவர் நகைச்சுவை நடிகர் அல்ல, கதா நாயகன். இவர் நாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் 'ஆறாம் அறிவு'. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் எதிர்பாராதவித மாக ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையால் மனைவி பாதிக்கப்படுகிறார். நிம்மதி இழந்து தவிக்கும் கணவன், மனைவியை அந்தப் பிரச்சினையில் இருந்து மருத்துவர் எப்படி மீட்கிறார் என்பதை திகிலுடன் கூடிய மர்மமான திரைக்கதை அமைத்து சுவையாகச் சொல்லியிருக்கிறார்களாம். 'தாரை தப்பட்டை' படத்தில் சசிகுமார் கோஷ்டியில் கரகம் ஆடிய சகானா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

"என்னுடைய குடும்பத்தில் நிறைய பேர் மருத்துவர்கள். அத னால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரண மாகவே மருத்துவம் படித்தேன். அதே சமயம் மாடலிங் மீதும் ஆர்வம் இருந்தது. "தொடர்ந்து திரைப்பட இயக்கம் குறித்துப் படித்தேன். சொந்த முயற்சியாக நானே இந்தப் படத்தை நடித்து இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்திருக்கிறேன்," என்கிறார் டாக்டர் பரத் விஜய்.

'ஆறாம் அறிவு' படத்தின் ஒரு காட்சியில் விஜய், சகானா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!