மேண்டலே ரோடு கட்டுமானத் தள விபத்தில் ஊழியர் பலி

மேண்டலே ரோட்டில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் மாண்டார். இறந்த அந்த ஊழியர் எந்த நாட்டைச் சேர்ந் தவர் என்ற விவரம் வெளியிடப் படவில்லை. அவருக்கு வயது 25 என்று நம்பப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அப்பகுதி லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டுமானத் தின் ஒரு பகுதி. இந்தக் கட்டு மானப்பணி அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் மரணமடைந்ததை நேரில் கண்டதாகக் கூறும் இரு வேறு தரப்பினர், இந்தச் சம்ப வத்தை இரண்டு விதமாகக் கூறுகின்றனர். சிலர் அந்த ஊழியர் உயரமான இடத்தில் இருந்து விழுந்து விட்டதாகவும், சிலர் அந்த ஊழியர் நின்றிருந்த தொங்கு சாரம் விழுந்ததால்தான் அந்த ஊழியர் இறந்துவிட்டார் என்றும் கூறுவதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுமான விபத்தில் காயமடைந்த 57 வயது ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!