மீண்டும் தோல்வியை தழுவிய மேன்யூ

மிட்சிலேண்ட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துக் கனவுகளை யூரோப்பா லீக் காற்பந்து வெற்றியின் மூலம் நனவாக்கலாம் என்ற மான்செஸ்டர் யுனைடெட்டின் எண்ணத்துக்குப் பின்னடைவு -ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்ற யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் அது டென்மார்க் கைச் சேர்ந்த மிட்சிலேண்ட் குழு விடம் 1=2 என்ற கோல் எண்ணிக் கையில் அது தோல்வியைத் தழுவி யதுதான். இனி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மேன்யூ மிட்சிலேண்ட் குழுவை வென்றால் மட்டுமே அது யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டி களில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

அத்துடன், யூரோப்பா லீக் கிண்ண வெற்றியாளர் மட்டுமே அடுத்த காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி களில் நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெறுவர் என்பது குறிப் பிடத்தக்கது. நேற்றைய ஆட்டத்தில் வெயின் ரூனி, டாவிட் ட கியா ஆகிய இரு முக்கிய வீரர்களைக் காயம் காரணமாக கடைசி நேரத்தில் இழந்த மான்செஸ்டர் யுனைடெட் குழு, மெம்ஃபிஸ் டிப்பாயின் 37ஆம் நிமிட கோல் மூலம் முன்னணிக்குச் சென்றது. ஆனால், அடுத்த ஏழாவது நிமிடத்திலேயே பதிலுக்கு ஒரு கோல் போட்டு யுனைடெட்டுக்கு நெருக்கடி யைத் தந்தது மிட்சிலேண்ட் குழு. இதைத் தொடர்ந்து யுனைடெட் டின் ஜெஸ்ஸி லிங்கார்ட்டின் கோல் போடும் முயற்சி பந்து மிட்சிலேண்ட் கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றதில் முடிந்தது.

எனினும், ஆட்டத்தின் 77ஆம் நிமிடத்தில் பால் ஒனாச்சு என்ற மிட்சிலேண்ட் வீரர் போட்ட கோலால் அந்தக் குழு இறுதியில் வெற்றி பெற்றது. பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் நான்காம் நிலையில் இருக்கும் குழுவைவிட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் குழு யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றால் மட்டுமே பிரிமியர் லீக்கைத் தாண்டி சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் விளையாட முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கு அந்தக் குழு முதற் படியாக இரண்டாம் சுற்று ஆட்டத் தில் மிட்சிலேண்ட் குழுவை வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!