பொறியில் சிக்கிய நாய் மீட்பு

லிம் சூ காங் பகுதியில் வைக் கப்பட்டிருந்த இரும்புக் கம்பிப் பொறியில் தெரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டதில் அதன் முதுகெலும்பு முறியக்கூடிய அளவுக்குப் பலத்த காயம் ஏற் பட்டது என்று 'ஆக்ஷன் ஃபோர் சிங்கப்பூர் டாக்ஸ்' (ஏஎஸ்டி) எனும் அமைப்பு தனது ஃபேஸ் புக் பக்கத்தில் கூறியது. லிம் சூ காங் லேனிலுள்ள 'அடோப்ஷன் அண்ட் ரெஸ்க்யூ' நிலையத்துக்கு அருகில் பிப்ர வரி 7ஆம் தேதி இந்த நாய் முதலில் காணப்பட்டது. பின்னர் தொண்டர்களும் சுயேச்சை மீட் பாளர்களும் அந்த நாயை பிப்ர வரி 12ஆம் தேதி ஒரு கட்டடத் துக்குப் பின்னால் கண்டு பிடித்தனர்.

அதன் உடற்பகுதியில் சுற் றப்பட்டிருந்த இரும்புக் கம்பி, அதன் சதையைப் பிளந்து படு காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய இரும்புக் கம்பிப் பொறிகளில் மாட்டிக் கொள் ளும் நாய்கள் அதிலிருந்து தப்ப அங்கும் இங்கும் முண்டினால், அந்தக் கம்பி இன்னும் ஆழ மாக அதன் சதைக்குள் புதை யும் என்று 'ஏஎஸ்டி'யின் தலை வர் ரிக்கி இயோ தெரிவித்தார். காயம்பட்ட நாயின் வெட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு இப்போது அது மருத் துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!