4வது பெரிய பொருளியலாக ஆசியான் உருவெடுக்கும்: விவியன் நம்பிக்கை

தென்­கி­ழக்கு ஆசியா வளம்­பொ­ருந்­திய வட்­டா­ரம் என்­றும் அமெ­ரிக்கா மீது சாத­க­மான கருத்­து­க­ளைக் கொண்­டுள்­ளது என்­றும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்து உள்­ளார்.

ஐக்­கிய நாடு­கள் அவை­யின் பொதுச் சபைக் கூட்­டத்­தின் தொடர்­பில் நியூ­யார்க் நக­ரில் நடை­பெற்ற ஆசிய சமூக விவாத அரங்­கில் பங்­கேற்று டாக்­டர் விவி­யன் பேசி­னார்.

"தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் ஒருங்­கி­ணைந்த பொரு­ளி­யல் தற்­போது US$3 டிரில்­லி­ய­னாக (S$4.3 டிரில்­லி­யன்) உள்­ளது. இது அடுத்த இரு­பது ஆண்­டு­களில் நான்கு மடங்­காக விட்­டா­லும் இரு­ம­டங்­கா­கப் பெரு­கும் என்று இந்த வட்­டா­ரம் எதிர்­பார்க்­கிறது.

"அவ்­வாறு இரு­ம­டங்­கா­கப் பொரு­ளி­யல் வளர்ந்­தால் உல­கின் நான்­கா­வது பெரிய பொரு­ளி­யல் வட்­டா­ர­மாக ஆசி­யான் உரு­

வெ­டுக்­கும்.

"எனவே, பல­து­ருவ உலகை நோக்கி நாம் முன்­னே­று­கி­றோம் என்­றால் அதில் ஒரு துரு­வ­மாக தென்­கி­ழக்கு ஆசியா விளங்­கும்.

"இந்த வட்­டா­ரம் இன்­னும் இள­மை­யாக உள்­ளது. இங்­குள்­ளோ­ரில் 60 விழுக்­காட்­டி­னர் 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள். மிகப்­பெரிய பொரு­ளி­யல் ஆற்­றல் இந்த வட்­டா­ரத்­தில் குடி­கொண்­டுள்­ளது என்­பதே இதன் அர்த்­தம்.

"சீனா, இந்­தியா, ஜப்­பான் போன்ற நாடு­களில் ஒட்­டு­மொத்­த­மா­கச் செய்­த­தைக் காட்­டி­லும் தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் அமெ­ரிக்கா அதிக முத­லீ­டு­க­ளைச் செய்­துள்­ளது. மேலும், அரை மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட அமெ­ரிக்க வேலை­வாய்ப்­பு­களை இந்த வட்­டா­ரத்­தில் உரு­வாக்கி ஆத­ரிக்­கிறது அமெ­ரிக்க வர்த்­த­கம்.

"கொவிட்-19 பர­வல் மிகுந்­தி­ருந்த நேரத்­தி­லும் 2021ஆம் ஆண்­டில் மட்­டும் US$40 பில்­லி­யன் அமெ­ரிக்க முத­லீ­டு­கள் ஆசி­யான் நோக்கி வந்­தன. இது ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 41 விழுக்­காடு அதி­கம்

"தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் வருங்­கா­லம் பிர­கா­ச­மாக உள்­ளது. இந்த வட்­டா­ரத்தை திறன்­த­கு­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே பாருங்­கள்.

"அமெ­ரிக்கா-சீனா போட்­டி­யின் வழி­யாக எங்­க­ளைப் பார்க்­கா­தீர்­கள். எங்­க­ளுக்கு நீங்­கள் (அமெ­ரிக்கா) தேவை. உங்­களை வர­வேற்­கி­றோம்," என்று டாக்­டர் விவி­யன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

மேலும் அவர், அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான நம்­பிக்­கைக் குறைவு உலக அரங்­கில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருப்­

ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு, காலம் கால­மாக அமைதி, பாது­காப்பை வலி­யு­றுத்தி வரும் ஐநா சாச­னத்­திற்கு விழுந்த பேரிடி. இந்­தப் போரும் கொவிட்-19 கொள்ளை­ நோ­யும் விநி­யோ­கத் தொட­ரில் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

"தனது விருப்­பங்­க­ளைத் தற்­காப்­ப­தில் சீனா தனித்து விளங்­கு­கிறது," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!