பிப்ரவரி, மார்ச் முதல் மத்திய வர்த்தக வட்டாரத்துக்கு ஐந்து புதிய பேருந்து சேவைகள்

நகருக்கு நேரடியாகச் செல்லும் ஐந்து புதிய பேருந்து சேவைகள் இந்த மாதம் 29ஆம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அவற்றுள் பொங்கோலுக்குச் சேவையாற்றும் பேருந்துச் சேவை யும் ஒன்று. நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. புதிய பேருந்துச் சேவைகளின் எண்கள் 666 முதல் 670 வரைப்பட்டதாக இருக் கும். அங் மோ கியோ, பிடோக், கிளமெண்டி / டோவர், பொங் கோல், யீ‌ஷுன் ஆகியவற்றுக்குப் புதிய சேவைகள் சேவையாற்றும். அவை மத்திய வணிக வட்டாரத் துக்கு நேரடி இணைப்பை ஏற் படுத்தித்தித் தரும். இந்தச் சேவைகள் பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும். வார நாட்களில் காலை நேரத்திலும் மாலை உச்ச நேரத்திலும் இவை இயங்கும்.

பொது விடுமுறை நாட்களில் இவை செயல்படா என்று வாரியம் தெரிவித்தது. இந்தப் புதிய சேவைகளையும் சேர்த்தால் மத்திய வர்த்தக வட்டாரத்துக்கான நேரடி பேருந்து சேவைகளின் எண்ணிக்கை 20 ஆகிறது. பொங்கோலுக்குச் சேவையாற்றும் 666 பேருந்து இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கும். தொடர்ந்து அடுத்த மாதம் 8 ஆம் தேதி, மார்ச் 15 மார்ச் 22 தேதிகளில் அடுத்த சேவைகளும் செயல்படத் தொடங்கும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!