8 Jun 2023 21:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jun 2023 17:09
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலோவாயூ எரிமலை புதன்கிழமை அதிகாலை வெடித்தது.எரிமலையில் இருந்து தீக்குழும்பு வெளியாகியுள்ளது.இதற்கு முன்னர் அந்த எரிமலை ஜனவரி மாதம் குமுறியது, அது மார்ச் மாதம் வரை தொடர்ந்தது.அதிகாலை 4:44 மணிக்கு எரிமலை வெடித்ததை வானூர்தி கேமரா மூலம் அதிகாரிகள் கண்டறிந்தனர். படங்கள்: ஏஎஃப்பி,அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
நியூயார்க் நகரத்தை சூழ்ந்தது புகைமூட்டம்
8 Jun 2023 18:24
கனடாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் வடஅமெரிக்காவிலும் புகைமூட்டப் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. படங்கள்: ராய்ட்டர்ஸ், கெட்டி இமெஜஸ் (ஏஎஃப்பி)
புகைமூட்டம் காரணமாக நியூயார்க் நகரம் முழுவதுதிலும் காற்றுத்தரம் நேற்று (ஜூன் 6) மோசமடைந்தது.
அங்கு சுதந்திர தேவி சிலையையும் வானுயுரக் கட்டடங்களையும் புகைமூட்டம் சூழ்ந்தது. மினசோட்டா முதல் மேசசூசெட்ஸ் வரை காற்றுத்தரம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
முடிவிற்கு வரும் குதிரைப் பந்தயம்
6 Jun 2023 12:02
கிராஞ்சியில் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் (சிங்கப்பூர் டர்ஃப் கிளப்) அமைந்திருக்கும் நிலப்பகுதி, 2027 மார்ச் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். வீடமைப்பு, இதர மேம்பாடுகளுக்கு அந்த இடம் வழிவிடுகிறது. உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உட்லண்ட்ஸ் வட்டாரத்தையும் மேம்படுத்துவது, லிம் சூ காங் வட்டாரத்தை உயர்தொழில்நுட்ப வேளாண் உணவுக் குழுமமாக உருமாற்றுவது உள்ளிட்டவை மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
கனத்த மழைக்கும் சளைக்காத பக்தி
5 Jun 2023 16:04
டேங்க் ரோட்டில் புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவைக் காண வியாழன் (1 ஜூன் 2023) காலை வந்த பக்தர்களுடன் மழை மேகங்களும் திரண்டன. ஆனால் பக்திக்கும் உறுதிக்கும் வளைந்தது வானிலை. தொடக்கத்தில் கனமாகப் பெய்தபின் திருக்குடமுழுக்கின் முக்கிய அங்கமான கலசம் ஊற்றுதலின்போது மழைப்பொழிவு குறைந்தது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
ஸ்டாலின்: நெஞ்சுக்கு நெருக்கமான சிங்கப்பூர்
5 Jun 2023 11:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jun 2023 12:43
கடந்த 24 மே 2023 அன்று சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூவுக்கு மன்னார்குடியில் சிலை நிறுவ உறுதியளித்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். படங்கள்: திமத்தி டேவிட்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
உலகமெங்கும் நடந்தேறிய விசாக தினக் கொண்டாட்டம்
4 Jun 2023 20:23
விசாக தினம் உலகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு பௌத்தர்கள் பௌத்த ஆலயங்களில் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
இந்தியாவில் 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து
3 Jun 2023 14:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jun 2023 16:25
இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) இரவு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்; 900க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து இது எனக் கூறப்படுகிறது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ், இபிஏ
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
விசாக தினக் கொண்டாட்டம்
2 Jun 2023 17:55
புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, வீடுபேறு அடைந்தது ஆகியவற்றை குறிக்கும் இந்த திருநாளன்று சிங்கப்பூரிலுள்ள பௌத்த ஆலயங்களில் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
கனத்த மழைக்கும் சளைக்காத பக்தி
1 Jun 2023 18:02
டேங்க் ரோட்டில் புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவைக் காண வியாழன் (ஜூன் 1 ஆம் தேதி) காலை வந்த பக்தர்களுடன் மழை மேகங்களும் திரண்டன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், கி.ஜனார்த்தனன். சபிதா ஜெயகுமார், மோனலிசா, ச ஐஸ்வரியா, ரவி சிங்காரம்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை
30 May 2023 16:51
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியபோது கந்தசாமி சேனாபதி கோயில் நகைகளை சட்டவிரோதமாக அடமானம் வைத்துள்ளார். நம்பிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள கோயில் நகைகள் சேனாபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த நகைகளை பலமுறை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 2.3 மில்லியன் வெள்ளியைக் கையகப்படுத்தினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், திமத்தி டேவிட்