சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் சுற்றுலாத்தலமாக சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்முன் கொண்டுவரும் கண்காட்சி. வரலாற்று அம்சங்களும் இதில் உண்டு. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
பூத்துக் குலுங்கும் 'டிரம்பெட்' மரங்கள்
22 May 2023 11:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 May 2023 12:00
'தபிபூயா ரோசியா' எனப்படும் 'டிரம்பெட்' மரங்கள் நீண்ட வறண்ட வெயில் காலத்திற்குப் பிறகு பெய்யும் மழையால் பூத்துக் குலுங்குகின்றன. சிங்கப்பூரின் சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் நடப்பட்டுள்ள கிட்டத்தட்ட 15,000 'டிரம்பெட்' மரங்கள் வளர்ந்து, பூத்து வருகின்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
கோல்கத்தாவில் மோக்கா சூறாவளியின் தாக்கம்
19 May 2023 14:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2023 14:58
இந்தியாவிலும் மோக்கா சூறாவளியின் தாக்கம் உள்ளது. கோல்கத்தாவில் பெய்த கனத்த மழையால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கன மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாலைகளிலும் தெருக்களிலும் பயணம் செய்கின்றனர். படங்கள்: இபிஏ, ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட பெலேயின் கல்லறை
17 May 2023 11:40
பிரேசிலின் சென்டோஸ் நகரில் அந்நாட்டின் காற்பந்து சகாப்தமான பெலேயின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கல்லறை பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. காற்பந்து திடலைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக் கூடம் இயூமெனிச்சல் நெக்ரோபொலிஸ் நினைவாலய இடுகாட்டில் அமைந்துள்ளது. படங்கள்: இபிஏ, ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
தென்கிழக்காசிய வட்டாரத்தில் சுட்டெரிக்கும் சூரியன்
15 May 2023 10:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2023 10:59
தென்கிழக்காசியா முழுவதும் அண்மைய நாள்களில் கடுமையான வெயில் வாட்டிவருகிறது. தீவிரமான பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக இது கருதப்படுகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம், 40 ஆண்டுகள் காணாத அளவு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகப் பதிவானது. மே மாதத்தில் பதிவான ஆக அதிக வெப்பநிலையும் அதுவே. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பிரபல ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களைப் போல் ஆடைகள் அணிந்து, மேடைப் பொருட்கள் கையில் ஏந்தி கார்டன்ஸ் பை த பே வளாகத்தில் மாதிரி சண்டையிட்டனர் ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
பெங்களூரில் சாமந்திப்பூ அறுவடை
4 May 2023 11:31
இந்தியாவின் பெங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள வயலில் சாமந்திப்பூக்களை அறுவடை செய்யும் தொழிலாளர்கள். படங்கள்: ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
தொழிலாளர் தின பொது விடுமுறையை முன்னிட்டு இஸ்தானாவில் மக்கள் கூட்டம்
2 May 2023 12:26
மே 1ஆம் தேதி தொழிலாளர் தின பொது விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் இஸ்தானா அதிபர் மாளிகை வளாகத்தில் வரவேற்கப்பட்டனர்.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இசை, ஆடல் உள்ளடங்கிய நேரடி படைப்புகளை மக்கள் கண்டுகளித்ததுடன் மாளிகையை வலம் வந்து அங்குள்ள செடி, கொடி வகைகளையும் கட்டமைப்புகளையும் பார்த்து ரசித்தனர். இவற்றில் ஏப்ரல் மாதம் அதிபர் ஹாலிமா யாக்கோப் திறந்து வைத்த 'Swan Pond' குறிப்பிடத்தக்க ஒரு புது அம்சம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
இந்தியாவை சுற்றும் பொன்னியின் 'செல்ல' நட்சத்திரங்கள்
26 Apr 2023 11:14
இவ்வாரம் வெள்ளித்திரையில் வெளியீடு காணவுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் செய்தியாளர் கூட்டமும் விளம்பர நிகழ்ச்சியும் மும்பையில் நடந்தேறியது. இவற்றில் நடிகர் பட்டாளம் ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, கார்த்தி, சீயான் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்துகொண்டு அனைவரின் உள்ளங்களில் இடம்பிடித்தனர். இவர்களுடன் திரைப்படத்தின் இயக்குநர் மணி ரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். படங்கள்: ஏஎஃப்பி