சிங்கப்பூரில் மாதம் $85,000க்கு வாடகைக்கு விடப்பட்ட வீடு

சிங்கப்பூர் பூமலை அருகே உள்ள டால்வி எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் மாதவாடகை $85,000 என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது அந்த பங்களாவின் ஓராண்டு வாடகை 1.02 மில்லியன் வெள்ளி ஆகும்.  

டால்வி எஸ்டேட் வீட்டுக்கு அடுத்தபடியாக புக்கிட் தீமாவில் உள்ள ஒரியோல் கிரெசன்டில் உள்ள வீட்டுவாடகை மாதம் $80,000ஆக இருந்தது. 

சிங்கப்பூரில் தரைவீடுகளுக்கான அதிகமான தேவைக்கான எடுத்துக்காட்டாக இத்தொகை அமைந்தது. 
 
தரைவீடுகளுக்கான தேவை 2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் அதிகரித்து வந்ததாக பிராப்நெக்ஸ் சொத்துச்சந்தை நிறுவனம் கூறியது.

தரைவீடுகளுக்கான வாடகை 2022ன் மூன்றாம் காலாண்டில் அதிவேகமாக 10.9 விழுக்காடு அதிகரித்தது.  

இரண்டாம் காலாண்டில் தரைவீடுகளுக்கான வாடகை 3.2 விழுக்காடு கூடியது. 

எல்லா தனியார் வீடுகளுக்கான ஒட்டுமொத்த வாடகை 8.6 விழுக்காடு உயர்ந்தது. 

வீடுகளை வாடகை எடுப்பதில் அதிகரித்துள்ள ஆர்வம், வாடகை உயர்வு ஆகியவற்றால் உரிமையாளர்கள் தங்கள் வீட்டை  விற்பதற்கு பதில் வாடகைக்கு விட முடிவு செய்யலாம் என்று பிராப்நெக்ஸ் கூறியது. 

மேலும், வெளிநாட்டிலிருந்து வரும் பணம் படைத்தவர்கள் சொகுசு தரை வீடுகளை எடுக்க விரும்புவதால் அந்த வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!