ஜாலான் புசாரில் ஜோசஃபின் டியோ தலைமையில் மசெக அணி

ஜாலான் புசார் குழுத்­தொ­கு­தி­யில் மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தலை­மை­யி­லான மசெக அணியை எதிர்த்து லிம் தியன் தலை­மை­யி­லான மக்­கள் குரல் கட்சி­யின் அணி போட்­டி­யி­டு­கிறது.

திரு ஹெங் சீ ஹாவ், 58, திரு­வாட்டி டெனிஸ் புவா, 59, புது­முகம் வான் ரிசால் வான் ஸக்­கா­ரியா, 42, ஆகி­யோர் மசெக அணி­யில் இடம்­பெற்­றுள்ள வேட்­பா­ளர்­கள்.

லியோங் ஸி ஹியான், 66, நூர் அஸ்­லான் பின் சுலை­மான், 49, மைக்­கல் ஃபாங் அமின், 43, ஆகி­ய இதர மூவரும் எதிர்க்­கட்சி அணி­யில் இருக்­கி­றார்­கள்.

இவர்­கள் நேற்று வேட்பு மனுக்­களைத் தாக்­கல் செய்­தார்­கள். வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேச மசெக குழு மறுத்துவிட்டது.