சுவரொட்டிகள் கிழிப்பு; போலிசில் புகார் அளித்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் குழுவின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அக்கட்சி போலிசில் புகார் அளித்துள்ளது.

சம்பவம் தொடர்பான படங்களைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டான் செங் போக்.

பிரசாரம் சூடுபிடித்தாலும்கூட ஒவ்வொருவரும் அமைதியாக இருந்து, மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் டாக்டர் டான் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிந்து தொங்கியபடி இருந்ததையும் சாலையிலும் புல்வெளியிலும் கிடந்ததையும் அந்தப் படங்கள் காட்டின.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online