இன அடிப்படையிலான அமைப்­பு­கள் தொடர்ந்து செயலாற்­று­வது அவசியம்

சிங்­கப்­பூ­ரி­லுள்ள வெவ்­வேறு இனச் சமூ­கங்­க­ளுக்கு இடையே தேவை­கள் மாறு­ப­டு­வ­தால் இன அடிப்படையிலான அமைப்­பு­கள் தொடர்ந்து செயலாற்­று­வது அவசியம் என செம்­ப­வாங் குழுத்­தொ­கு­தி­ மக்கள் செயல் கட்சி அணியில் இடம் பெற்றிருக்கும் விக்­ரம் நாயர் தெரி­வித்­தார். கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக கல்­வித் தேர்ச்­சி­யி­லும் பொரு­ளா­தா­ரத்­தி­லும் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­கள் மேம்­பட்­ட­தற்கு சிண்­டா­வும் இந்­திய அறநிறுவ னங்களும் முக்­கிய பங்குவகிப்­ப­தாக திரு விக்­ரம் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார். திரு விக்­ரம் நேற்று காலை சக வேட்­பா­ளர்­க­ளு­டன் தொகுதி உலா சென்­றி­ருந்­தார்.

“இந்­திய சமு­தா­யத்­தில் பொது­வாக இரண்டு பிரச்­சி­னை­கள் முன்பு இருந்­தன. பாலர் பள்ளி சேர்க்கை விகி­தம் மிக­வும் குறைவு என்­ப­தால் தொடக்­க­நிலை ஒன்­றில் முதன்­மு­றை­யா­கப் பள்­ளிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு ‘கேட்ச் அப் திட்­டம்’ நடத்­தப்­பட்­டது. இரண்­டா­வது, கணிதம், அறி­வி­யல் பாடங்­களில் பின்­தங்­கிய மாண­வர்­க­ளுக்கு சிண்­டா­வின் ஸ்டெப் துணைப்­பா­டத்­ திட்­டம் நடத்­தப்­பட்­டன,” என்று திரு விக்­ரம் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் ஒரே மக்­க­ளா­கப் பார்க்­கப்­ப­டும்­போது, சிண்டா, மெண்­டாக்கி, சிடிசி என இன­ அடிப்படையிலான சமூகநல அமைப்­பு­கள் தேவை­யில்லை என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் வேட்­பா­ளர் கலா மாணிக்­கம் நேற்று முன்

­தி­னம் தமிழ் முர­சி­டம் கூறி­யது பற்றி கேட்­கப்­பட்டபோது திரு விக்­ரம், அந்­தக் கருத்து தவ­றா­னது என பதி­ல­ளித்­தார்.

இன அடிப்படை அமைப்­பு­கள் மூலம் அந்­தந்த சமூ­கத்­து­டன் இணை­வது மேலும் எளி­தா­வ­தா­கத் திரு விக்­ரம் கூறி­னார். “ நாம் அனை­வ­ரும் சிங்­கப்­பூர்­வா­சி­கள் என்­றா­லும் ஒவ்­வொரு சமூ­கத்­தின் தேவை­களும் சிறி­த­ள­வில் மாறு

ப­டு­வ­தால் இந்­தத் தேவை­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க சமூக அமைப்­பு­க­ளால் முடி­யும்.

“அத்­து­டன், ஒரே இனம் அல்­லது சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஒரு­வ­ரோடு ஒரு­வர் இணை­வது மனித இயல்பு. அத­னால்­தான் சிண்­டா­வைத் தவிர பல்­வேறு இனம் சார்ந்த உதவி அமைப்­பு­களும் அற­நி­று­வ­னங்­களும் உரு­வாகி செயல்­ப­டு­கின்­றன,

“இத்­த­கைய அமைப்­பு­க­ளின் மூல­மா­கத்­தான் முன்­னோ­டித் தலை­வர்­கள், இளம் அர­சி­யல் தலை­வர்­கள் மற்­றும் வர்த்­த­கத் தலை­வர்­கள் சமூக பொறுப்­பேற்று பின்­தங்­கி­யுள்ள அல்­லது வசதி குறைந்த இந்­திய இனத்­த­வர்­க­ளுக்கு உதவ முடி­யும் ,” என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!