‘கிராப்-ஃபூட்பாண்டா ஒப்பந்தம் கவலைகளை ஏற்படுத்தியது’

கிராப், ஃபூட்பாண்டா நிறுவனங்களுக்கு இடையே ஏற்படவிருந்த ஒப்பந்தம் ஒன்று உணவு விநியோகச் சந்தையில் போட்டித்தன்மை தொடர்பில் கவலைகளை தோற்றுவித்துள்ளதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கூறியது.

தற்போது அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது.

‘கிராப் ஹோல்டிங்ஸ்’, சிங்கப்பூர் உள்பட தென்கிழக்கு ஆசியாவில் ஃபூட்பாண்டா நடத்துநரான ‘டெலிவரி ஹீரோ’வை முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதியை வாங்குவதன் தொடர்பில் ஜனவரி 10ஆம் தேதி விசாரணை தொடங்கியிருந்ததாக ஆணையம் கூறியது.

அந்த உத்தேசப் பரிவர்த்தனை காரணமாக, சிங்கப்பூரில் இணையத்தில் உணவு வாங்கும், உணவு விநியோகிக்கும் சேவைக்குச் சந்தையில் போட்டித்தன்மை கணிசமாகக் குறையக்கூடும் என்று சந்தேகம் ஏற்பட காரணங்கள் உள்ளன,” என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த உத்தேசப் பரிவர்த்தனையால் 2024ன் போட்டித்தன்மைச் சட்டத்தின் பிரிவு 54 மீறப்படுமா என்பதில் விசாரணை முக்கியக் கவனம் செலுத்தியது.

‘டெலிவரி ஹீரோ’க்கும் ‘கிராப்’க்கும் பிப்ரவரி 2ஆம் தேதி இடைக்கால நடவடிக்கைகளுக்கான ஆணையை வழங்கியதாக ஆணையம் கூறியது. சந்தை தொடர்ந்து வெளிப்படையாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம்.

விசாரணை முடியும்வரை நீடிக்கவிருந்த அந்த நடவடிக்கைகள், உத்தேச ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து நடப்பில் இல்லை.

இடைக்கால நடவடிக்கைகளுக்கான ஆணையின்கீழ், பின்வரும் சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது அவற்றுக்கு இட்டுச்செல்லக்கூடிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொள்ளக்கூடாது.

- சிங்கப்பூரில் இணையத்தில் உணவு வாங்கும், உணவு விநியோகிக்கும் சேவைகளின் வர்த்தகங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒருங்கிணைவது.

- சிங்கப்பூரில் இணையத்தில் உணவு வாங்கும், உணவு விநியோகிக்கும் சேவைகளில் சுயேட்சையாகப் போட்டியிட எந்தவொரு தரப்பின் ஆற்றலையும் பாதிக்கும் எவ்வித ஒப்பந்தமும் நடப்பில் இருப்பது.

- சிங்கப்பூரில் ‘டெலிவரி ஹீரோவின்’ ‘ஃபூட்பாண்டா’ வர்த்தகம் வெற்றிகரமாகச் செயல்படுவதிலும், அதன் விற்பனை ஆற்றலிலும் ஏற்படக்கூடிய தாக்கம்.

ஆணையின்படி, ‘டெலிவரி ஹீரோ’க்கு ‘கிராப்’ நிறுவனம் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தக்கூடாது. ‘டெலிவரி ஹீரோ’, ‘கிராப்’ நிறுவனத்திடமிருந்து எந்தவொரு தொகையையும் பெறக்கூடாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!