நாளை தொடங்குகிறது ஒன்பது நாள் பட்ஜெட் விவாதம்

நாடாளுமன்றம் நாளை முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்குக் கூடி அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பற்றி விவாதிக்கும். அந்த விவாதத்தில், சிறிய நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிலையற்ற பொருளியல் சூழ்நிலை யால் பாதிப்படையக்கூடிய சிங்கப் பூரரர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவி ஆகியவை முக்கிய விவகாரங்களாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விவாதத்தின் முதல் மூன்று நாட்களில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் மார்ச் 24ஆம் தேதி அறிவித்த அமைச்சுகளுக்குக் கிடைக்கும் முன்னுரிமை நிதி ஒதுக்கீடுகள் பற்றி நாடாளு மன்ற உறுப்பினர்கள் (எம்பி.க்கள்) பேசுவார்கள். ஒவ்வொரு எம்பி.யும் 20 நிமிடம் வரை பேச முடியும். நிதி மற்றும் வர்த்தக தொழில் அமைச்சுகளின் அரசாங்க நாடா ளுமன்றக் குழுவின் தலைவரும் ஹாலந்து=புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான திரு லியாங் எங் ஹுவா பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

"$4.5 பில்லியன் மதிப்புள்ள தொழில்துறை உருமாற்றத் திட்டத் தின் ஒரு பகுதியாக, சுமார் 20 தொழில்துறைகளில் புத்தாக் கத்தை அமல்படுத்த அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். இந்த அரசாங்க உதவியாளர் திட்டம் நிச்சயம் நன்மை பயக்கும். ஆனால், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோரை ஒன்றிணைந்து பணியாற்ற வைப்பது சுலபமான தல்ல," என்றும் திரு லியாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித் தார். மூன்றாவது நாளில் அமைச்சர் ஹெங், எம்பி.க்களின் கருத்துக ளுக்கும் ஆலோசனைகளுக்கும் பதிலளிப்பார். பின்னர் நாடாளுமன் றம் இம்மாதம் தொடங்கும் நிதி யாண்டுக்கான பட்ஜெட்டை நிறை வேற்ற வாக்களிக்கும்.

அதற்கு அடுத்து அமைச்சர்கள் தங்கள் அமைச்சுகளின் பட்ஜெட் விவரங்களை வெளியிட்டு பேசு வார்கள். பின்னர் எம்பி.க்கள் அந்தந்த அமைச்சுகளின் செலவுத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து கருத்தளிப்பார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!