ரத்த சுத்திகரிப்பு: போட்டி பாதிப்பில்லை

சிறுநீரக ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றன. இதன்மூலம் அவை இரண்டும் இந்தச் சந்தையில் 40%க்கும் அதிக பங்கை வகிக்கின்றன. இருந் தாலும் இத்தொழில்துறையில் நிலவும் போட்டியில் இதன்மூலம் பாதக விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம் என்ற அமைப்பு அந்த ஆய்வை நடத்தியது. ஆசியா ரீனல் கேர் (SEA) பிரைவேட் லிட் என்ற நிறுவனம் 2012 டிசம்பரில் ஆர்த்தி பிரை வேட் லிட் என்ற நிறுவனத்தை வாங்கியது. இதற்கு சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம் அனுமதி அளித்தது. இந்த அனு மதியைத் தொடர்ந்து சிறுநீரக ரத்த சுத்திகரிப்புச் சந்தை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.

உட்லண்ட்சில் இருக்கும் தோங் டெக் சியான் தோங் லியான் சின் சியா தேசிய சிறுநீரக அறநிறுவன ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் நோயாளிகள். படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!