பட்டத்தொழிலர் தேர்ச்சிகளை மேம்படுத்த புதிதாக எட்டு செயல்திட்டங்கள்

சிங்கப்பூர் ஊழியர் அணி மேம் பாட்டு வாரியம், புதிதாக எட்டு நிபுணத்துவப் பயிற்சி செயல்திட் டங்களைத் தொடங்கும். மறுதேர்ச்சி பெற, மேம்பட, வேலை மாறிக்கொள்ள, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறை யில் வேலைக்கு மாறிக்கொள்ள விரும்பும் பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் புதிய செயல்திட்டங்கள் மூலம் பலன்பெறலாம். மூன்று முதல் ஒன்பது மாதங் கள் வரை நீடிக்கும் இத்திட்டங் கள், இணையப் பாதுகாப்பு, மென் பொருள் உருவாக்கம் போன்ற வற்றை உள்ளடக்கும். இப்புதிய திட்டங்களையும் சேர்த்தால் மொத்தம் 10 பயிற்சித் திட்டங்கள் நடப்பில் இருக்கும்.

இவை இந்த ஆண்டில் வேலை தேடுகின்ற, வேலை மாறுகின்ற இத்தகைய 250 ஊழியர்களுக்குப் போதுமானவையாக இருக்கும் என்று வாரியம் குறிப்பிட்டது. இத்தகைய ஊழியர்கள் தாங்கள் பெறும் பயிற்சிக்குத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஊழியர்களின் சம்பளத் தில் 70% வரை, மாத வரம்பாக $2,000 வரை முதலாளிகளுக்கு மானியம் உண்டு. நீண்டகால மாக வேலையில்லாமல் உள்ள, 40க்கும் அதிக வயதுள்ள இத்த கைய ஊழியரைச் சேர்க்கும் முத லாளிக்கு 90% மானியமுண்டு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது