கருத்தரிப்பு விழிப்புணர்வுக்கு ஆடை அலங்காரப் பவனி

சுதாஸகி ராமன்

மயில்களை மையமாகக் கொண்ட வண்ணமயமான ஆடைகள். தங்கத்தில் ஒளிரும் பளபளப்பான நூல் வேலைப்பாடுகள். வெள்ளை, சாம்பல், கறுப்பு, பழுப்பு என்ற நான்கு நிறங்களை முக்கியமாகக் கொண்ட வடிவமைப்புகள். இக்கூறுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தமது ‘சூப்பர்நோவா’ தொகுப்பிலிருந்து 14 ஆடைகளைப் பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் குமாரி மாலினி ரமணி, 46, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பின்போது பார்வையாளர்களுக்குக் காட்டி னார். ஹோட்டல் வேகபோண்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த ஆடை அலங்கார அணி வகுப்பில் வலம் வந்த ஆடைகளைப் பார்வையாளர்கள் உடனே வாங்கிச் செல்லவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந்த விற்பனையிலிருந்து திரட்டப்படும் தொகையிலிருந்து 30 விழுக்காடு ‘பெல்ரிஸ்’ எனப் படும் சிங்கப்பூரில் உயிரியல் துறை பண்புகள் தொடர்பான சட்ட ஆய்வுக்கு வழங்கப்படும். “சிங்கப்பூரில் பெண்கள் கருத் தரிப்பதற்கான தெரிவுகள் யாவை, இங்கு அனுமதிக்கப்படுகின்ற தெரிவுகள் யாவை என்பதை சிங்கப்பூரர்களுக்கு ‘பெல்ரிஸ்’ விளக்குகிறது. “தற்போது நாங்கள் மெற் கொள்ளும் கரு மரபியல் நிலைமை தொடர்பான ஆய்வுகளுக்கு இந் நிகழ்ச்சியிலிருந்து வசூலிக்கப் பட்ட நிதி உதவும்,” என்றார் பெல்ரிஸின் நிர்வாக இயக்குநர் குமாரி ஹர்பிரீத் பேடி. சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் நடத்தப்படும் ‘பெல்ரிஸ்’ அமைப்பு, கல்வியாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் உதவியுடன் உயிரி யல், மருத்துவத்துறை மேம்பாடு களால் அவ்வப்போது உருவாகும் சர்ச்சைக்குரிய பண்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறது. எந்த ஓர் அரசாங்கம், அரசியல் கொள்கை, பொருளியல் அல்லது சமய அடிப்படையையும் சாராத இந்த அமைப்பு பெரும்பாலும் அதன் உறுப்பினர்களின் சந்தா, நன்கொடை போன்றவற்றின் உதவியால் செயல்படுகிறது.

‘பெல்ரிஸ்’ அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் தாம் வடிவமைத்த ஆடைகளை மாலினி ரமணி (நடுவில்) விற்பனை செய்கிறார். படம்: திமத்தி டேவிட்