தளவாடத்துறை திறனாளர்களைப் பயிற்றுவிக்க புதிய திட்டம்

தள­வா­டத் தொழில் துறைக்கு ஏற்ப திறனா­ளர்­களைப் பயிற்­று­விக்க புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்­பட்­டது. தள­வா­டத் துறை திறனா­ளர்­கள் மாற்­றுத் திட்டம் (பிசிபி) என்றழைக்­கப்­படும் இந்தத் திட்டம் ஜூலை மாதம் தொடங்­கும். இதில் தள­வா­டத்­துறை அதி­கா­ரி­கள், தள­வா­டத்­துறை நிர்­வா­கிகள் போன்ற பதவி வகிப்­போர், திறனா­ளர்­கள், மேலா­ளர்­கள் ஆகி ­யோ­ருக்­காக 150 இடங்களை அளிக்­கும். ‘தி சப்ளை செயின் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் அகாடமி’ என்ற பயிலகம் இந்தத் திட்­டத்­தின் மேலா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது ஊழி­யரணி மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்­படும்.

நேற்று நடந்த இந்தத் திட்­டத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய மனிதவள அமைச்­சர் லிம் சுவீ சே, “சிங்கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 7 விழுக்­காட்டு பங்கு தள­வா­டத் தொழில் துறை மூலம் வருகிறது. மேலும் அது 200,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்­துள்­ளது. இந்தத் தொழில் துறை­யில் புத்­தாக்­கம், செயல்­தி­றன் மேம்பாடு, சிறப்பு நிபு­ணர்­கள், தள­வா­டம் தொடர்­பான தீர்­வு­கள், திட்டச் செய­லாக்­கம் போன்ற பணி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன என்றார். “நிறு­வ­னங்கள், சேவை வழங்­கு­வோர் ஆகி­ய­வற்­று­டன் தொழில்­நுட்­பம், பல்­வேறு நடை முறை­களுக்கு இடை­யே­யான ஒன்­றிணைப்­பு ஆகியவற்றின் மூலம் குறு­கிய காலத்­தில் பணி­களைக் குறைந்த அள­வி­லான தவ­று­களு­டன் சிறப்­பா­கச் செய்ய முடி­யும்.

“சிறப்­பாக செயல்­படு­வ­தற்கு நிறு­வ­னங்கள் தொழில்­நுட்­பம், ஊழி­யர்­கள் உத­வி­யு­டன் சேவை­களை குறைந்த விலை­யி­லும் நிறை­வா­க­வும் சிறப்­பா­க­வும் எல்லா நேரங்களி­லும் செய்ய முடி­யும்,” என்றார் அமைச்சர் லிம்.