அனுபவத்தை நினைவுகூரும் முன்னோடிகள்

சிங்கப்­பூர் ஆயு­தப்­படை­யின் பழுத்த அனு­ப­வ­சா­லி­க­ளான முன்னோடிகள் 50 பேர் ஒன்­றிணைந்து ஆயு­தப்­படை­யில் அக்காலத்தில் தாங்­கள் பெற்ற அனு­ப­வங்களை­யும் பொன்விழா கொண்டாட்­டத்­தில் தங்க­ளது பங்களிப்­புப் பற்­றிய அனு­ப­வங்களை­யும் தொகுத்து நூல் ஒன்று எழு­தி­யுள்­ள­னர். '50 எஸ்­ஏ­எ­ஃப் பய­னியர்ஸ்" என்று பெய­ரி­டப்­பட்ட அந்த நூல் நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. 212 பக்­கங்களைக் கொண்ட அந்­நூ­லில் முன்­னோடி வீரர்­கள் 50 பேரும் ஆயு­தப்­படைப் பணி­யில் சேரும்­போது அங்­கி­ருந்த குறை­வான வளங்களை வைத்­துக்­கொண்டு தாங்கள் ஆற்­றிய பணி பற்­றிய மல­ரும் நினை­வு­களை இந்த நூலில் நினைவு கூர்ந்­துள்­ள­னர்.

தெமா­செக் கிளப்­பில் சனிக்­ கி­ழமை மாலை நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு விழா­வில் துணைப் பிர­த­மர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண் டார். அப்­போது அந்த முன்­னோ­டி­களில் சிலர் தற்­காப்­புத் தூது­வ­ர் களாக நிய­மிக்­கப்­பட்­ட­னர். இந்தப் பொறுப்பு வகிப்­ப­தன் மூலம் அவர்­கள், இப்­போதைய ஆயு­தப்­படை வீரர்­கள், மாண­வர்­கள் ஆகி­யோ­ரி­டம் வர­லாற்­றுச் சிறப்­பு­மிகு தங்கள் அனு­ப­வங்கள், அப்­போதைய ராணுவ செயல்­பாடு போன்றவை பற்றி பகிர்ந்­து­கொள்­ள­லாம். இந்த நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யின் மூலம் 'எஸ்­ஏ­எ­ஃப் கேர் ஃபண்ட்' நிதிக்­காக $100,000 திரட்­டப்­பட்­டது.

இந்த நிதி, சேவைக்­கா­லத்­தின்­போது உடல் உறுப்பு செய­லி­ழக்­கும் வகை­யில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு கூடு­த­லான உத­வி­களைச் செய்­வ­தற்­குப் பயன்­படுத்தப்படும். திரட்­டப்­பட்ட நிதிக்கு நிக­ரான தொகையைத் தற்­காப்பு அமைச்சு வழங்­கும். ஆயு­தப்­படை அனு­ப­வங்களை நினை­வு­கூ­ரும் இந்த நூல் விற்­பனை­யில் விடப்­பட மாட்டா. ஆத­ர­வா­ளர்­கள், பள்­ளி­கள், ஓய்­வு­பெற்ற ஆயு­தப்­படை வீரர்­கள் ஆகி­யோ­ருக்கு வழங்கப்­படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!