ஹவ்காங் மக்களைப் பீடித்த ‘பொக்கிமோன் காய்ச்சல்’

ஹவ்காங் வட்­டா­ரத்­தில் பொக்­கி­மோன் மோகம் அதி­க­ரித்து வரு­வ­தால் மக்கள் பலரும் தங்கள் பாது­காப்­புக்குப் பாதகம் விளை­விக்­கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று போலிஸ் நினை­வூட்­டி­யுள்ளது. ஹவ்காங் அக்­கம்பக்­கப் போலிஸ் மையம் தனது ஃபேஸ்­புக் பக்­கத்­தில் 'அக்­கம்பக்­கம் 4' 'பொங்கோல் பார்க்' ஆகிய இடங்களில் குறிப்­பிட்ட ஒரு சில குழு­வி­னர் கூடுவதைக் கவ­னித்து வரு­வ­தா­கச் சொன்னது.

பொக்­கி­மோனைத் துரத்­தும் பொருட்டு அவர்­கள் சாலை­களைக் கடக்­கும்போது சாலைப் பாது­காப்பைக் கவ­னத்­தில் கொள்­ளா­மல் கடப்­பது தங்களுக்­கும் மற்­ற­வர்­களுக்­கும் ஆபத்தை விளை­விக்­கும் என்றும் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை கொடுத்து நடக்­கும்படியும் அதன் ஃபேஸ்­புக் பக்­கத்­தில் பொதுமக்களைக் கேட்­டுக்­கொண்டது. மேலும் அப்பகுதியில் இரவு வேளையில் பொக்­கி­மோன் விளை­யாட்­டில் ஈடு­படு­வோர் ஒலி இரைச்­சலைக் குறைத்­துக் கொள்­ளு­மா­றும் குடி­யி­ருப்­பா­ ளர்­கள் வச­திக்­காக வட்­டா­ரத் தைச் சுத்­த­மாக வைத்­துக் ­கொள்­ளு­மா­றும் போலிஸ் அறிவுறுத்தியது.

ஹவ்காங் வட்டாரக் குடியிருப்பாளர்கள் கடந்த புதன்கிழமைஇரவு தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சாலைகளைக்கடந்து 'பொக்கிமோன் கோ' விளையாடினார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!