நிறுவனங்களுக்கு ‘சிங்பாஸ்’ பதிலாக ‘கார்ப்பாஸ்’

நிறுவனங்களுக்கு 'கார்ப்பாஸ்' என்ற புதிய அடையாளம் அறி முகமாகிறது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய 'கார்ப்பாஸ்' மூலம் மட்டுமே நிறு வனங்கள் இணையச் சேவை களைப் பயன்படுத்த முடியும். இது, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 'கார்ப்பாஸ்' தேவைப்படும் முதல் நான்கு அரசாங்க அமைப் புகளின் பட்டியலில் சிங்கப்பூர் சுங்கவரி, தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவை இடம்பெற்று உள்ளன.

கார்ப்பாஸ், சிங்பாஸ் ஆகி யவற்றின் பின்னணியில் செயல் படும் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம், குடிமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் தனித்தனி யாக நுழைவு முறை இருப்பதால் மேம்பட்ட பாதுகாப்பு இருப்பதோடு தனிப்பட்டவர்களின் தகவல் களும் பாதுகாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டது. "இணையம் வழி பாதுகாப் பாக பரிவர்த்தனைகளுக்கும் சேவைகளுக்கும் புதிய மாற்றம் உதவும்," என்று ஆணையத்தின் உதவி தலைமை நிர்வாகி சான் சியோவ் ஹோ குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!