தீ மூட்டியதாக குற்றச்சாட்டு

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் தீ மூட்டியதாக லிம் யிங் சியாங் என்ற 41 வயது சிங்கப்பூரர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. அந்த தீ சம்பவத்தில் இரண்டு காப்பிக் கடைகளும் ஓர் ஈரச் சந்தையும் அழிந்துவிட்டன. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41, புளோக் 493ல் இருக்கும் சந்தையில் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை சுமார் 2.42 மணிக்கு நெட்டிப் பெட்டிகளை லிம் கொளுத்திவிட்டார் என்றும் அப்படிச் செய்தால் தீ மூண்டு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்தே அவர் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு கட்டடத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லிம் தீ மூட்டியிருக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறுகிறது. இத்தகைய குற்றத்திற்கு ஆயுள்தண்டனை விதிக்க முடியும். அல்லது பத்து ஆண்டு வரைப்பட்ட சிறை அல்லது அபராதம் விதிக்க முடியும். லிம் புலன்விசாரணைக்காக ஒருவார காலம் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். வழக்கு அக்டோபர் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் சந்தேகப்பேர்வழி (கோடுபோட்ட சட்டை) கைதானதாக போலிஸ் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை